Share on Social Media

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்ட கணக்கை பதிவு செய்து வருகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, கடந்த 2020-21-ம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 682.20 கோடி ரூபாயை நஷ்டமாக பதிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாகத்தான் ஜொமோட்டோ நிறுவனத்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 2018-ம் ஆண்டில் ரூ.106.91 கோடியும் , 2019-ல் ரூ.1,010 கோடியும், 2020-ல் ரூ.2,385 கோடியையும் நஷ்டமாக பதிவு செய்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், இந்நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.1,093.63 கோடியாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டில் ரூ.2,684.91 கோடியாக இருந்தது. அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.2,981 கோடியாக மீண்டும் அதிகரித்தது. இது கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.

பங்கு விலை, மற்றும் எப்போது வெளியிடப்படும் என்கிற விவரங்கள் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *