Share on Social Media

ஆம், இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி தான் இழந்த 70 விக்கெட்டுகளில் 63ஐ இந்திய ஸ்பின்னர்களிடமே இழந்திருந்தது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங்கில் பயங்கரமாக சொதப்ப இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு வெறும் 218 ரன்களே இலக்காக அமைந்தது. ஆனால் அந்த அணியின் ஒன்பது விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் சரசரவென்று சாய்க்க தென்னாபிரிக்கா வெறும் 109 ரன்களுக்கு அவுட்டாகி போட்டி மூன்றாவது நாளிலேயே நிறைவுபெற்றது.

இரண்டாவது போட்டி பெங்களுருவில் முதல் நாளோடு மழையால் கைவிடப்பட்டாலும் முதல் நாளில் ஆல் அவுட்டான தென்னாபிரிக்காவின் எட்டு விக்கெட்டுகளை அஷ்வின் – ஜடேஜா கூட்டணி மட்டுமே வீழ்த்தியிருந்தது. இந்த இரண்டிற்கும் மேலாக நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களே எடுத்திருந்தனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாpபிரிக்கா வெறும் 79 ரன்களில் சுருண்டது. நாக்பூர் மைதானத்தின் இந்த ஆடுகளத்தை ஆய்வு செய்த ஐசிசி அதன் தரத்தை பற்றி எச்சரித்து கேள்வி எழுப்பியது அப்போது சர்ச்சையானது. இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி சொந்த மண்ணில் தனது முதல் தொடரை கைப்பற்றுகிறார்.

வேகப்பந்துவீச்சில் மிரட்டும் தென்னாப்பிரிக்காவை தனது சுழலால் அடிபணிய வைத்த இந்தியாவிற்கு காத்திருந்தது அடுத்த மிகப்பெரிய சவால். நான்கு வருடங்களுக்கு முன்பு உலகக்கோப்பையுடன் ஒய்யாரமாய் இருந்த சீனியர்கள் நிரம்பிய அணியை வைட்வாஷ் செய்து மண்ணை கவ்வ வைத்த இங்கிலாந்திற்குப் பறக்க தயாராகியது கோலியின் இளம் படை.

– களம் காண்போம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *