Share on Social Media


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பன்டிட் தீனதயாள உபாத்யாய மாவட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.,

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க, நிவாரணம் அளிக்க, மேலும் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் தொடராமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் தி.மு.க. (DMK) அரசு தோல்வியுற்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி (M. Karunanidhi) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார். தற்போது அவரது மகன் பார்வையிடுகிறார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்காமல் மக்களை திசை திருப்ப தமிழ் புத்தாண்டு (Tamil New Year) விவகாரத்தில் அரசு தலையிட்டு வருகிறது.

ALSO READ | Sellur Raju: சசிகலா வருகையை குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும்

நாடு முழுவதும் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சித்திரை 1 ம் தேதி வெவ்வேறு விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த சித்திரை தமிழ் வருடபிறப்பை, தை மாதமாக மாற்றுவது கண்டிக்கக்கூடியது. நீங்கள் எப்படி தமிழ் புத்தாண்டை மாற்ற முடியும் ஆகவே திமுக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெரியார் பொங்கல் அன்று மற்றும் வாழ்த்து சொல்லுவேன் என்று கூறியுள்ளார் அவர் சொல்லும்போது வார்த்தையில் சூரிய பகவானுக்கு நன்றி சொல்வோம் என்று கூறியுள்ளார். 

பெரியாரே சூரியபகவான் என்றுதான் கூறியுள்ளார். தமிழையும், மதத்தையும், மொழியையும் வைத்து குழப்பி அரசியல் செய்கிற தீய சக்திகளாக உள்ளனர்.

சித்திரை 1 கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையை தை 1 என்று மாற்றுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு என்ன உரிமை உள்ளது. மற்ற மதத்தினர் அவர்களது புத்தாண்டை கொண்டாட கூடாது என ஸ்டாலின் அவர்கள் சொல்ல முடியுமா? மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாத நிலையில் திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்களை செய்கின்றனர் எனவும் இந்து மத மரபில் பழக்கவழக்கங்களில் அரசாங்கம் தலையிடுவது என்பது மதசார்பின்மைக்கு விரோதமானது இனிமேல் மதப் பிரச்சினைகள் தலையிட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்.

திமுக அரசாங்காத்திற்கு எதிராக பேசினால் கைது செய்வார்களா? சர்வாதிகார போக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் அகோரம் மற்றும் அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பனை கைது செய்திருக்கிறார்கள். தமிழக அரசின் அரசாங்கத்தின் இந்த மோசமான ஜனநாயக விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ALSO READ | OPS on Tamil New Year: தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *