Share on Social Media

India Tour of Sri Lanka: இலங்கை சென்றுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியில்  ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாளை இரண்டு அணிகளுக்கும் இடையிலனா இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்ற விரும்புகிறது.

கொழும்பில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின் ஜோடி – குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக பந்து வீசினர்.

அதே நேரத்தில், இளம் வீரர்களான பிருத்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த இன்னிங்ஸை விளையாடினர். கேப்டன் ஷிகர் தவானும் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் தனது பங்களிப்பை செய்தார்.

ALSO READ | IND vs SL: மரியாதை தெரிந்த க்ருணால் பாண்டியா என புகழாரம்

இந்தியா-இலங்கை 2 வது ஒருநாள் போட்டியை எங்கே பார்ப்பது?
சோனி ஸ்போர்ட் 2 இந்தியா vs இலங்கை ஒருநாள் தொடரை இந்தியாவில் ஒளிபரப்புகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியை சோனி டென் 2 மற்றும் சோனி டென் 2 எச்டி சேனல்களில் காணலாம்.

இந்தியா-இலங்கை 2 வது ஒருநாள் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
இரண்டாவது இந்தியா-இலங்கை போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை சோனி லிப் (Sony LIV) OTT தளத்தில் காணலாம்.

இந்தியா-இலங்கை 2வது ஒருநாள் போட்டி எப்போது, ​​எங்கே நடைபெறும்?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டி ஜூலை 20 ஆம் தேதி கொழும்பின் ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கும்.

IND vs SL ஒருநாள் தொடர் முழு அணி:
இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, தேவதூத் பாடிக்கல், ரிதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், குணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேதன் சாகரியா.

இலங்கை அணி: தாசுன் ஷானகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, பதும் நிசங்கா, சரித் அஸ்லாங்கா, வாணிந்து ஹசரங்கா, ஆஷென் பண்டாரா, மினோட் பானுகா, லஹிரு உதரா, சாமேக்ஷாமுஷ்மணா சண்டகன், அகில தனஞ்சயா, ஷிரான் பெர்னாண்டோ, தனஞ்சய் லக்ஷன், இஷான் ஜெயரத்ன, பிரவீன் ஜெயவிக்ரேமா, அசிதா பெர்னாண்டோ, கசுன் ராஜிதா, லஹிரு குமாரா, இசுரு உதனா.

ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *