Share on Social Media

முதல் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள், வீட்டில் பெரியோர்கள் அளிக்கும் இந்த விஷயம் குறித்து குழப்பமடைய செய்யலாம். இந்த நேரத்தில் இந்திய உணவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகள்

இந்தியாவில் உணவு முறை பெரும்பாலும் பருவக்காலங்களை ஒட்டியே இருக்கும். உடல் வெப்பநிலையில் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இந்த வகை உணவுகள் அதை தவிர்க்கும் வகையில் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும். உணவை சூடாகவோ அல்லது குளிரவைத்து இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

கர்ப்பிணிக்கு கொரோனா தடுப்பூசி : எப்போது? ஆபத்தானதா ? யாரெல்லாம் தவிர்க்கணும்? முழுமையான கைடு!

குளிர்ச்சியான சீசனில் கொய்யாவை நீங்கள் எடுத்துகொள்வதன் மூலம் சளி மற்றும் இரும்லாஅல் பாதிக்கப்படலாம். இந்த குளிர் காலமாக இருந்தால் அசைவம் அல்லது சைவ சூப் குடிக்கலாம். இதே போன்று தன் கர்ப்பிணி பெண் பருவகாலத்துக்கேற்ப உடல் வெப்பநிலையை பராமரிக்க செய்யும் வகையில் உணவை எடுத்துகொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் நமது இந்திய உணவில் தவிர்க்க வேண்டியை உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

​பப்பாளிக்காய்

samayam tamil Tamil News Spot

பப்பாளிக்காயில் பொரியல், குழம்பு, கூட்டு என்று செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் பப்பாளியை பொறுத்தவரை அதை பழமாக சாப்பிடலாம். அதுவும் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துகொள்ளலாம்.

ஆனால் பப்பாளிக்காயில் சுரக்கும் பாலானது லேடெக்ஸின் அதிக செறிவு இ ருப்பதால், இது கருப்பை சுருக்கங்களை தூண்டும். யோனிப்பகுதியில் லேடெக்ஸ் பயன்படுத்துவது கருக்கலைப்பை தூண்டும்.

​கத்தரிக்காய்

samayam tamil Tamil News Spot

கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடும் போது அளவாக எடுத்துகொள்ள வேண்டும். இது டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்க கூடிய பைட்டோஹார்மோன்களை கொண்டுள்ளது. இது மாதவிடாயை தூண்டுவதாக ஆய்வுகள் சொல்கிறது. அதனால் அதிகமான அளவு கத்தரிக்காய் சாப்பிட்டால் அது கருச்சிதைவை உண்டாக்கும்.

மாதவிடாய் கோளாறு, மாதவிடாய் முன் நோய்க்குறியான பி.எம்.எஸ் மற்றும் மாதவிலக்கு நோயை குணப்படுத்த கத்தரிக்காய் உதவியாக இருக்கும்.

கத்தரிக்காயை அளவாக சாப்பிட்டால் பிறப்பு குறைபாடுகளுக்கான அபாயம் குறையும். அதனால் நன்மையும் உண்டு. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது கருச்சிதைவு, அசிடிட்டி, செரிமான பிரச்சனையை உண்டாக்கலாம், கத்தரிக்காயை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் அலர்ஜியை உண்டாக்க வாய்ப்புண்டு

​எள் விதைகள்

samayam tamil Tamil News Spot

கரு உருவாதலை தடுக்க எள் உடன் வெல்லம் சேர்த்து உருண்டையாக எடுத்துகொள்வது வழக்கம். இது தேவையற்ற கர்ப்பத்தை நிறுத்தக்கூடும் என்பது பாரம்பரியமாகவே கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.

எள் விதைகள் கர்ப்பிணிகள் எடுக்கும் போது கருப்பை தசைகளை தூண்டி சுருக்கங்களை ஏற்படுத்தி கருமுட்டையை வெளியேற்றும்.

கர்ப்பிணிக்கு 30 வாரம்: இந்த வாரத்தில் கர்ப்பிணிகள் உடலுறவு கொள்வது நல்லதாம், வேறு என்ன செய்யலாம்!

பெண்கள் குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் எள் சாப்பிடுவதை தவிர்ப்பது தான் நல்லது. கர்ப்பிணி பெண்கள் பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, கொட்டைகள், உலர் திராட்சை, பாதாம் போன்ற உலர்ந்த பழங்களை எடுத்துகொள்ளலாம்.

இரண்டாம் ட்ரைமெஸ்டரின் இறுதி மாதத்தில் மருத்துவரின் அறிவுரையோடு எள் விதைகள் சேர்க்கலாம். நேரடியாக இல்லாமல் கிரேவி, உணவில் தூவி சாப்பிடலாம். அதிகமாக எடுக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.

​பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகள்

samayam tamil Tamil News Spot

பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகள் இந்திய உணவுகளில் முக்கியமானவை. வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் நேரடியாக பயன்படுத்தகூடாது, அதை உணவில் கலந்து பயன்படுத்தலாம். பெருஞ்சீரகம் ஆனது மாதவிடாயை தூண்டும்.

இவை தாய்ப்பாலூட்டும் கால்லங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளன. இது ஹார்மோன் கோளாறூகளை சுத்தம் செய்து கருப்பையை சுத்தப்படுத்தக்கூடியவை.

இரண்டு மசாலா பொருள்களிலும் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கருப்பை சுருக்கங்களைத் தூண்டக்கூடும். சமைக்கும் போது உணவில் சிறீய அளவில் சேர்க்கலாம். ஆனால் கை வைத்தியம் மருத்துவத்துக்காக இதை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

அன்னாசிப்பழம்

samayam tamil Tamil News Spot

அன்னாசிப்பழத்தை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் சாப்பிடவே கூடாது. அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலின் என்னும் என்சைம் உள்ளது. இது கர்ப்பப்பையை மென்மையாக்கி அதன் சுருக்கத்தை தூண்டுகிறது. இது ஆரம்பகட்ட கர்ப்பத்தில் எடுக்கும் பெண்களுக்கு கருச்சிதைவையும் உண்டாக்கலாம்.

​துளசி

samayam tamil Tamil News Spot

துளசி மூலிகைகளில் முக்கியமானவை. இது சளி மற்றும் இருமல் காலங்களில் இயல்பாக வாயில் இட்டு மென்று சாப்பிடுவது உண்டு. சளி, இருமல் இருந்தால் துளசி இலைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமானது தான். ஆனால் இதை கர்ப்பிணிகள் எடுக்க கூடாது. இது பாதுகாப்பானது அல்ல. தினசரி அளவில் 2 இலைகள் வரை எடுத்துகொள்ளலாம்.

அஜினோமோட்டோ

samayam tamil Tamil News Spot

இது இந்தியாவின் மசாலா பொருள்களில் இல்லை ஆனால் அஜினோமோட்டோவை தற்போது பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதனால் அது வீட்டு சமையலில் முக்கிய பொருளாக மாறியுள்ளது. சீன உணவுகளை சுவையாக மாற்ற இவை பயன்படுத்தப்படுகிறது.

கருச்சிதைவுக்கு பிறகு எப்படி இருக்கணும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள்? பெண்கள் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பகாலத்தில் சுவை மொட்டுகளுக்கு மயங்கி உணவில் அஜினோமோட்டோ சேர்த்துவிட வேண்டாம். ஏனெனில் அஜினோமோட்டோ கருவில் மூளையின் வளர்ச்சியை மோசமாக பாதிக்க செய்யும்.

பாதுகாப்பான உணவுகள் எடுத்துகொள்வதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *