Share on Social Media


வித்தியாசமான காதல் கதை: காதலில் வயதோ, சாதியோ பார்ப்பதில்லை ஆம், காதலுக்கு கண் இல்லை. மியான்மரை சேர்ந்த 20 வயது பெண் மற்றும் 77 வயது ‘வாலிபரின்’ காதல் உங்களை ஆச்சர்யத்தில் அழ்த்தும். 

தி சன் இணையதளத்தில் வெளியான செய்தியில், இவர்களது வித்தியாசமான காதல் கதை விவரிக்கப்பட்டுள்ளது. 20 வயதான ஜோ மியான்மரில் வசிக்கிறார். அவர் ஒரு மாணவி. அவரது 77 வயதான காதலன் டேவிட் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவர் இசை அமைப்பாளராக உள்ளார். டேவிட்டிற்கு குழந்தைகள் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதல் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஆயிரக்கணக்கான மைல் தூரம்  இருந்தாலும், அவர்கள் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவருக்குமான 57 வயது இடைவெளி கூட இவர்களின் காதலுக்கு தடையாக இல்லை.

ALSO READ | Hair Dye Effect: முடி கருப்பானது; ஆனால் முகம் கார்டூனானது..!!

ஜோ மற்றும் டேவிட் டேட்டிங் தளம் மூலம் சந்தித்தனர். ஜோ, 18 மாதங்களுக்கு முன்பு, அவள் ஒரு வழிகாட்டியைத் தேடிக்கொண்டிருந்தாள். அவள் படிப்பிற்கு நிதி உதவி செய்யும் ஒரு வழிகாட்டியை அவள் விரும்பினாள். மறுபுறம், டேவிட் காதலிக்கும் மனநிலையுடன் எப்போதாவது இந்த டேட்டிங் தளத்திற்கு வருவார். டேவிட் தன்னை ஒருபோதும் வயதானவராகக் கருதுவதில்லை என்றும் தன்னை எப்போதும் இளமையாகவே கருதுவதாகவும் கூறுகிறார்.

டேவிட் தன்னை விட 50 வயது குறைந்த பெண்களுடன் மட்டுமே உறவு கொள்ள விரும்புவதாக கூறினார். டேட்டிங் தளத்தில் டேவிட்டை கண்டுபிடித்ததை, ஜோ தன்னை பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.  பரஸ்பரம் தங்களை காதலன் என்றும் காதலி என்றும் அழைப்பதைத் தவிர்ப்பதாக டேவிட் கூறுகிறார். டேவிட் மற்றும் ஜோ பரஸ்பரம் உண்மையான நண்பர்களாகவும், ஆத்ம துணையாகவும் கருதுகின்றனர்.

ALSO READ | நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்; நடந்தது என்ன!

மியான்மர் மற்றும் கோவிட் உள்நாட்டு சூழ்நிலை காரணமாக இருவரும் பரஸ்பரம் விலகி இருப்பதாக டேவிட் கூறினார். இருவரும் முன்பு நிறைய பேசிக் கொண்டனர். இருப்பினும், இப்போதுஅவர்கள் பரஸ்பரம் உணர்வுபூர்வமாக இணைந்தாக அவர்கள் கூறுகின்றனர். ஜோவின் வழிகாட்டியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டேவிட் கூறுகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள் உள்ளதாகவும். ஜோவின் பாஸ்போர்ட் தயாரான உடன், டேவிட்டை சந்திக்க அவர் இங்கிலாந்துக்கு வருவார் என டேவிட் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.