Share on Social Media


இன்றைய அவசர யுகத்தில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். தற்போதைய பலரின் கவலையும் எடை அதிகரிப்பாகத் தான் உள்ளது. இருப்பினும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க யோகா மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். எடை அதிகரிப்பு பல உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. அதிலும், தற்போதைய கோவிட் பிரச்சனைகளுக்கு இடையே உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது கட்டாயமாகி விட்டது.

​எடையைக் குறைக்க உதவும் உணவுகள்

பலர் விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்பி பல வழிமுறைகளை நாடுகின்றனர். அதில் சில வழிமுறைகள் ஆரோக்கியமான தேர்வுகள் இல்லை. அதற்கு பதிலாக, நாம் சமைத்து உண்ணும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வது உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவும். பொதுவாக இந்திய உணவுகள் என்றாலே மசாலாப் பொருட்கள் இல்லாமல் இருக்காது. இதுபோன்ற மசாலாப் பொருட்கள், உணவுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமின்றி, தொப்பையைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவோர் நாங்கள் கூறும் இந்த 5 மசாலாப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி வாங்க அந்த 5 மசாலாப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

​இலவங்கப்பட்டை

samayam tamil Tamil News Spot

நம் வீட்டு சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, உங்களின் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இலவங்கப்பட்டை நீரைக் குடிப்பது ஒருவரின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் விரைவான கொழுப்பு இழப்பு நிகழும்.

ருசியாவும் சாப்பிடணும்… எடையும் குறையணுமா… அப்போ காலை உணவாக இதெல்லாம் சாப்பிடுங்க…

​பெருஞ்சீரகம்

samayam tamil Tamil News Spot

எடை இழக்க உதவும் மற்றொரு மசாலா பெருஞ்சீரகம். இது இயற்கையாகவே பசியை அடக்க உதவும் என்று நாம் அறிவோம். பெருஞ்சீரகத்தை நீங்கள் தேநீரில் கலந்தும் அருந்தலாம். வைட்டமின் ஏ, சி மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துகள் நிறைந்த பெருஞ்சீரகத்தை தேயிலையுடன் சேர்த்துக் குடிக்கும்போது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, சிறந்த செரிமானத்துக்கு வழி வகுக்கும் பெருஞ்சீரகம், விரைவாக எடை இழப்புக்கும் வழி வகுக்கிறது.

கௌட் பிரச்சினை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்… எதை தவிர்க்க வேண்டும்

​வெந்தயம்

samayam tamil Tamil News Spot

வெந்தயத்தில் காணப்படும் அதன் இயற்கையான நார்ச்சத்து உங்களின் பசியை அடக்க உதவி புரியும். இதில் உள்ள நார்ச் சத்து, எப்போதும் உங்களை முழுதாக உணர வைக்கும். இதனால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். வெந்தயத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து எடை இழப்பை ஊக்குவிக்கும்.

நாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஆனால் வேகமாக எடையை குறைக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன…

​ஏலக்காய்

samayam tamil Tamil News Spot

எடை இழப்புக்கு உதவும் மற்றொரு மசாலாப் பொருள் ஏலக்காய். ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் இரவே ஊறவைத்து விட்டு காலை எழுந்ததும், அதனை சாப்பிடுவது வளர்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது. ஏலக்காயில் மெலடோனின் போன்ற அத்தியாவசிய மூலங்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க அவசியமான மூலங்களாகும். வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாகக் கரைக்கப்பட்டு, அதிக ஆற்றல் வெளியாகும். இதனால், உடல் பருமன் மற்றும் கூடுதல் உடல் எடை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

எடையைக் குறைக்க உதவும் தாமரை விதை… வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…

​மிளகு

samayam tamil Tamil News Spot

கருப்பு மிளகு நமது உடலில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த மசாலா உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கமளிக்கிறது. என்ன செய்தும் உங்களின் உடல் எடை குறையாவிடில், நீங்கள் கிரீன் டீயில் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை குடிக்க வேண்டும். அல்லது காலையில் எழுந்ததும் 3 அல்லது 4 மிளகை மென்று தின்றுவிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம். மிளகில் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து நீங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களின் உடல் எடையை கணிசமாக குறைக்க உதவும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *