Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • விஷ்ணு விஷாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜுவாலா கட்டா
  • ஜாலி வீடியோ வெளியிட்ட ஜுவாலா கட்டா
  • ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்.

காதல் மனைவி ரஜினி நட்ராஜை பிரிந்த பிறகு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்தார் விஷ்ணு விஷால். லாக்டவுன் நேரத்தில் ஜுவாலாவுக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் தேனிலவுக்கு எங்கும் செல்லவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஹைதராபாத்தில் ஜுவாலாவுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஒரு நடிகருக்கு மனைவியாகிவிட்டதால் தன் முதல் ரீலை வெளியிட முடிவு செய்தார் ஜுவாலா கட்டா. அதுவும் விஷ்ணு விஷாலுக்கே தெரியாமல் வெளியிட விரும்பினார். இதையடுத்து தன் கணவர் அசந்து தூங்கிய நேரத்தில் அவர் மீது சாய்ந்தபடி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு என் முதல் ரீல் என்று தெரிவித்துள்ளார் ஜுவாலா கட்டா.

ஜுவாலாவின் வீடியோவை பார்த்த ரசிகர்களோ, நல்ல பொண்டாட்டி. விஷ்ணு விஷால் அண்ணா இனி தூங்கும்போது கூட ஒரு கண்ணை திறந்து வைத்து தூங்குங்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.

முன்னதாக ஜுவாலா கட்டா விஷ்ணு விஷாலுக்கு மாம்பழம் ஊட்டிவிடும் வீடியோ வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை காரமணாக தங்களின் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க முடியாமல் போன குறையை புகைப்படங்களை வெளியிட்டு தீர்த்துக் கொண்டிருக்கிறார் ஜுவாலா.

அப்படி அவர் தன் திருமணத்தின்போது அம்மாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாசமாக வெளியிட, அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ ஜுவாலாவை விளாசினார்கள்.

கெரியரை பொறுத்த வரை மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர். படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் ஹீரோ விஜய் மகன், ஹீரோயின் விஜய் சேதுபதி ‘மகள்’: இது எப்படி இருக்கு?





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *