‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.
‘விருமன்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மதுரை, தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ‘விருமன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த தினத்தில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் ’விருமன்’ படத்தின் மூலம் தனது நீண்டநாள் கனவு நிறைவேறி இருப்பதாகவும் ’விருமன்’ படத்தின் குழுவினர்களை மிஸ் செய்வதாகவும், அனைவரும் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறி உள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் அதிதி ஷங்கர். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன் ; இயக்குனர் வருத்தம்!