Share on Social Media

விராட் கோலி தொடர்பான விஷயங்கள் எப்போதும் கவனம் பெறுபவை. அது அவரது திருமணமாக இருந்தாலும் சரி, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதாக இருந்தாலும் சரி, அவர் என்ன சாப்பிடுகிறார் என்பதைச் சொன்னாலும் சரி…

அண்மையில் இன்ஸ்டாகிராமில் கோஹ்லி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் Question/Answer session நிகழ்வை நடத்தினார். அப்போது, விராட் கோலியின் உணவு முறை பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விராட், இன்ஸ்டாகிராம் பதிவில், தனது தற்போதைய உணவைப் பற்றி சொன்னார்.

நிறைய காய்கறிகள், சில முட்டைகள், 2 கப் காபி, குயினோவா, நிறைய கீரை மற்றும் தோசைகளை உட்கொள்கிறார், ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் தான் சாப்பிடுவதாக விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். 

Also Read | ICC: 2024-2031 வரையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியானது

அப்போது, இந்திய கேப்டன் விராட் கோலி தனது ‘சைவ உணவில்’ முட்டைகளை சேர்த்ததற்காக ட்ரோல் செய்யப்பட்டார்.   அதுவரை கோஹ்லி சைவ உணவைப் பின்பற்றுபவர் என்று எண்ணிய ரசிகர்கள், அவரது ‘சைவ உணவில்’ முட்டைகள் வந்தது தொடர்பாக ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

தான் ஒருபோதும் வேகன் (vegan) உணவு முறையை பின்பற்றுபவர் என்று சொன்னதில்லை என்று கூறிய விராட் கோலி, என்றும், சைவ உணவு உண்பவர் என்றும் சொல்லி கோஹ்லி தனது நிலையை தெளிவுபடுத்தினார்.

கோஹ்லியின் பதிலுக்கு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.

சோஷியல் மீடியாவில் கோஹ்லி எல்லாவற்றையும் படிக்கிறார் ஒருவர் சொல்ல, மற்றொருவரோ சைவ உணவு உண்ணும் கோலி, முட்டை எந்த செடியில் வளர்கிறது என்பதை சொல்ல முடியுமா என்று கேட்டார். இப்படி நெட்டிசன்கள் கோலியின் காலை உணவைப் பற்றிய ட்ரோல்களை தொடர்கின்றனர். 

இந்த நையாண்டி ட்விட்டர்களுக்கு நடுவில், ஒரு அப்பாவி ரசிகர், “கோலி சார், நீங்க என்ன வேணுன்னாலும் சாப்பிடுங்க, ஆனா  RCB க்கு கப் வாங்கி குடுத்துடுங்க” என்றார்.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக இந்திய அணி ஹோட்டலில் குவாரண்டைனில் இருக்கிறது. ஹோட்டலில் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் 14 நாள் தனிமைப்படுத்தலில் கோலி இருக்கிரார். இந்த போட்டி ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை சவுத்தாம்ப்டனின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

Also Read | Breaking! 12th Exams: இந்த மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன

Also Read | Covid-vaccination: தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்

Also Read | History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல… 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *