Share on Social Media


சில படங்கள், சில நடிகர்கள், சில இயக்குனர்கள்…. இப்படி சில விஷயங்கள் எப்போதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றன, விரும்பப்படுகின்றன, நேசிக்கப்படுகின்றன. அந்த ‘சில நடிகர்களின்’ வரிசையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயமாக ஒரு இடம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை பாதித்துள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தனது சினிமா வாழ்வில் அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கண்டு வருகிறார். ஒரே பாணியில் நடிக்காமல் பலவித கதாபாத்திரங்களிலும் அசால்டாக நடித்து புகழையும் ரசிகர்களின் அன்பையும் அள்ளிச்செல்கிறார் விஜய் சேதுபதி. 

அவர் சமீபத்தில் ‘மாஸ்டர்’ (Master) படத்தில் தளபதி விஜயின் வில்லனாக பட்டையைக் கிளப்பினார். அதே போல் தனது தெலுங்கு அறிமுகப் படமான ‘உப்பேனா’வில் இரக்கமற்ற ராயணமாகவும் நடித்து பாராட்டு பெற்றார். 

ALSO READ: எனது நிலைப்பாடு சாதி, மதங்களுக்கு எதிரானது, மனிதர்கள் தான் எனக்கு முக்கியம்: விஜய் சேதுபதி

ஒரு டசனுக்கும் அதிகமான பெரிய படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, தான் குருவாக எண்ணும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மற்றும் அவரது தொழில்துறை சகாவான நிதிஷ் வீரா ஆகியோரது மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த சோகத்திலிருந்து தன்னை மீட்கவும், அமைதிக்காகவும் அவர் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ஒரு புதிய வீடியோ தற்போது வைரல் (Viral) ஆகி வருகிறது. ஒரு பசுமையான சூழலில், மாங்காய்களை பறித்து அவற்றை ஒரு நண்பரிடம் விஜய் சேதுபதி போடுவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. மிகவும் யதார்த்தமான ஒரு தோற்றத்தில் விஜய் சேதுபதி காணப்பப்டுகிறார். ஊரடங்கில் ஆரோக்கியமான, இயற்கையான ஒரு சூழலில் விஜய் சேதுபதி தனது நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கிறார் என்று இதிலிருந்து தெரிகிறது. 

இதற்கிடையில், ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘கடைசி விவசாயி’ மற்றும் ‘ மும்பைக்கர் ‘ ஆகிய விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் ரிலீசுக்காக தயாராக உள்ளன. மேலும், ‘காத்து வாக்குலா ரெண்டு காதல்’, ‘விடுதலை;, ‘காந்தி பாத்’, ’19 (ஏ)’, ‘ மெர்ரி கிறிஸ்மஸ் ‘ ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

ALSO READ: Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *