Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஜனகராஜுக்காக விஜய் சேதுபதி செய்த காரியம்
  • ஒபாமா படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி

ஹீரோ, வில்லன், கவுரவத் தோற்றம் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்கிறேன் என சந்தோஷமாக சொல்பவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் நானி பாலா இயக்கத்தில் பாண்டியராஜன் மகன் ப்ரித்வி, பூர்நிஷா, ஜனகராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஒபாமா படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் விஜய் சேதுபதி.

கவுரவத் தோற்றமாக இருந்தாலும் அது முக்கிய கதாபாத்திரமாம். ஒரு முன்னணி நடிகரை தான் ஒப்பந்தம் செய்கிருக்கிறார்கள். நடிக்கிறேன் என்று சொன்ன மனுஷன் படப்பிடிப்பு நேரத்தில் முடியாது என்று கூறிவிட்டாராம்.

இப்போ என்ன செய்வது என்று இயக்குநர் அப்செட்டானதை பார்த்த ஜனகராஜ், இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்று கூறி 96 பட இயக்குநர் பிரேம்குமாருக்கு போன் செய்திருக்கிறார்.

ஒபாமா பட விஷயத்தை சொல்லி, விஜய் சேதுபதியை நடிக்க வரச் சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார் ஜனகராஜ். பிரேம் குமாரும் விஜய் சேதுபதிக்கு போன் செய்து கேட்க, அவர் உடனே ஓகே சொல்லி நடிக்க வந்துவிட்டாராம்.

விஜய் சேதுபதியை நடிக்க வைக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று நானி பாலா ஜனகராஜிடம் கேட்டிருக்கிறார். 96 படத்தில் நடித்தபோது அவருடன் பழகியபோது அவரின் குணம், சீனியருக்கு கொடுக்கும் மரியாதை பற்றி தெரிந்து கொண்டேன். அந்த நம்பிக்கையில் தான் கேட்டேன் என்றாராம் ஜனகராஜ்.

96 படத்தில் ஜனகராஜை காவல் தெய்வம் என்று தான் அழைத்தார் விஜய் சேதுபதி. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சு விட்டுடுங்கனு கதறிய சிம்பு



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.