Share on Social Media


பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம்  ‘லைகர்’.  இந்த படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார்.  இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, ரோனித் ராய், அலி பாஷா, மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் அவருக்கு குருவாக உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  மைக் டைசன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ரிலீசாகும் என்று கூறியிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.  தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படத்தின் முன்னோட்ட காட்சி வரும் டிசம்பர்-31ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ALSO READ | தள்ளிபோகிறதா விஜய்யின் படம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.