Share on Social Media


நாளை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாள். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்துவரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியாகயிருக்கிறது.

கேங்க்ஸ்டர் படமான இதன் தலைப்பு என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என #விஜய்65 படக்குழுவில் சிலரிடம் பேசினேன்.

”விஜய்யிடம் ஏகப்பட்ட டைட்டில்களை சொன்னதில், நான்கைந்து டைட்டில் இறுதிகட்ட பரிசீலனையில் இருக்கிறது. ‘டார்கெட்’, ‘ரைஃபிள்’, ‘புல்லட்’, ‘ஜூட்’ என எல்லாமே பாய்ந்து தெறிக்கும் துப்பாக்கி தோட்டா தொடர்பான டைட்டில்களாகவே வைத்துள்ளனர். இதில் ‘டார்கெட்’ என்ற டைட்டிலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனாக ரெடி செய்து ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். ஆனால், அந்த டைட்டில்தான் இறுதிசெய்யப்பட்டதா அல்லது வேறு டைட்டிலை விஜய் ஓகே செய்தாரா என்பது எங்களுக்கே சஸ்பென்ஸ்தான்” என்கிறார்கள்.

என்ன நண்பா வெயிட்டிங்கா!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *