Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • விஜய்க்கு சிலை வைத்த மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர்
  • சிலை பார்த்து பூரித்துப் போன ரசிகர்கள்

நடிகர்கள், நடிகைகளுக்கு சிலை வைப்பது புதிது அல்ல. இந்நிலையில் மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்க்கு சிலை வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து முழு உருவ சிலையை செய்து நிறுவினார்கள். அந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திறந்து வவைத்தார். சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சிலையை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாது,

சிலை மிகவும் அருமையாக இருக்கிறது. மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தை நினைத்து பெருமையாக இருக்கிறது. அண்ணாவை நேரில் பார்த்தது போன்றே இருக்கிறது. பீஸ்ட் மோட் என்று தெரிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் இப்படி சொல்ல சமூக வலைதளவாசிகளோ வேறு மாதிரி பேசுகிறார்கள். அதாவது, இது விஜய் சிலை என்று சொன்னால் விஜய்யே நம்ப மாட்டார். விஜய்க்கு உருப்படியாக சிலை செய்யவே மாட்டீர்களா?

முன்பு சிலை செய்தபோதும் அது யார் போன்றோ இருந்தது. இது சத்தியமாக விஜய் சிலை இல்லை. பார்ப்பவர்களுக்கு அப்படி தெரியாது. திடீர்னு பார்த்தால் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மாதிரி அல்லவா இருக்கிறது என கூறியுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
Vijay விஜய் பங்களாவுக்கு பக்கத்து பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கிய ரஜினி மருமகன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *