Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மன்னிப்பு கேட்டு விஜய்க்கு கடிதம் எழுதிய எஸ்.ஏ. சந்திரசேகர்
  • விஜய்யுடன் மீண்டும் பேசத் துடிக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர்
  • விஜய், அப்பாவை பிரித்த அரசியல் விவகாரம்

தன் மகன் விஜய்யை அரசியலுக்கு அழைத்து வர ஆசைப்படுகிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர். ஆனால் இந்த விஷயத்தில் அப்பாவுடன் சேர்ந்து செயல்பட விரும்பவில்லை விஜய். இந்நிலையில் விஜய் பெயரில் கட்சியை பதிவு செய்ய முயன்றார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

அதை பார்த்த விஜய் கோபம் அடைந்து தன் அப்பாவின் கட்சிக்கும், தனக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றார். மேலும் தன் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது என்று கட்டளையிட்டார். எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாமல் விஜய் கையெழுத்திட்டிருக்கிறார். அவர் ஒரு விஷ வளையத்தில் சிக்கியிருக்கிறார் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

என் மகன் விஜய்க்காக என் கெரியரை தியாகம் செய்தேன். அவருக்கு பியூனாக, மேனேஜராக வேலை பார்த்தேன். அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க பிறர் மறுத்தபோது, நான் விஜய்யை ஹீரோவாக்கினேன். என்னை போன்ற ஒரு அப்பா கிடைக்க விஜய் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
6 மாசம்னு சொல்லும் விஜய் தரப்பு, ஆனால் 3 மாசம்னு சொல்கிறார் எஸ்.ஏ.சி.தான் விஜய்யை சந்தித்து பேசி மூன்று மாதங்களாகிறது என்றார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஆனால் ஆறு மாதங்களுக்கும் மேலாக அப்பாவும், மகனும் சந்தித்து பேசவில்லை என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பா மீது இருக்கும் கோபத்தால் அவரின் எண்ணை கூட செல்போனில் பிளாக் செய்து வைத்திருக்கிறாராம் விஜய்.

இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். நீ என்னுடன் பேசினால் மட்டும் போதும் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம். அப்பாவின் மன்னிப்பை ஏற்று விஜய் அவருடன் பேசுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கெரியரை பொறுத்த வரை விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. சென்னையில் பூஜை போட்டுவிட்டு ரஷ்யாவில் ஷூட்டிங் நடத்தப் போகிறார்களாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *