Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
  • திருமணத்திற்காக காசு சேர்த்து வைக்கும் விக்னேஷ் சிவன்

நானு ரௌடி தான் படத்தில் நடித்ததில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். தான் நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். அப்படி ஒரு ரசிகர், நயன்தாராவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது என்று கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவனோ, நயனின் தன்னம்பிக்கை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்பொழுது ஒருவர், நீங்கள் இயக்குநராகாமல் இருந்திருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று கேட்டார். இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருப்பேன் என்று கூறினார் விக்னேஷ் சிவன்.

அவரின் பதிலை பார்த்த ரசிகர்களோ, விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான ஒற்றுமையே தன்னம்பிக்கை தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாராவுடன் திருமணம் எப்பொழுது?: விக்னேஷ் சிவன் செம விளக்கம்நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். 15 நாட்கள் தான் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம். மேலும் இரண்டாம் பாடலை ஜூலையில் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

முன்னதாக சித் ஸ்ரீராம் குரலில் வெளியான இதுவும் கடந்து போகும் பாடல் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil samayam Tamil News Spotநயன்தாரா, பெரியார், ராமதாஸ், திருமாவை கலாய்த்த ‘மேதகு’ இயக்குநர்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *