Share on Social Media


விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தில் இணைகின்றனர். அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு‘ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றி பாரதியாரின் கவிதை வரிகளான ‘வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைத்தனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

படமே வரல.. அதுக்குள்ள இப்படியா..?: அஸ்வினை விளாசும் நெட்டிசன்கள்!
‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இதுவரை ஏற்று நடித்திடாத கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து மெனக்கெட்டு நடித்து வருகிறார் சிம்பு. அவரின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்குவதாக சிம்பு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து, கையில் துப்பாக்கியுடன் நிற்கும் அட்டகாசமான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சிம்பு ரசிகர்கள் ‘வெந்து தணிந்தது காடு’ படம் குறித்த அப்டேட்டை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

நன்றி தெரிவித்த மாநாடு பட குழுவினர்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *