Share on Social Media


நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரை இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனது யூடிப் பக்கத்தில் வனிதா பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சைகளை கிளப்ப, அதற்கு தன் பாணியில் பதிலளித்துள்ளார் வனிதா விஜயகுமார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிய வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

சினிமாவிலும் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனால் தனக்கு விருப்பமான உணவை சமைத்து வீடியோவாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு , மலபார் பீப் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ போட்டார் வனிதா. இந்த வீடியோ தான் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலர் ஆதரவாக கமெண்ட் போட்டாலும், ஒருசிலர் வனிதாவை திட்டி வருகின்றனர்.

லிப்லாக் போட்டோவை வெளியிட்ட ராஷ்மிகா: வயிறெரியும் ரசிகர்கள்!
அதில் நீங்கள் எல்லாம் இந்துவா? கருமம், நீங்கள் வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான வீடியோ என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த வனிதா, மக்களே என்னாச்சு உங்களுக்கு. என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இருக்கின்றனர். இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதிலிருந்து அமெரிக்காவில் வளர்ந்தவள்.

இதனால் சிறு வயதில் இருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்கக் கூடாது. இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் கூறியது போல் உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறிகளையோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோசமாக சாப்பிடுங்கள் என்று கூலாக பதிலளித்துள்ளார்.

பிக் பாஸ் புகழுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *