Share on Social Media


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என செட்டிலான வனிதா சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா (Vanitha Vijayakumar) தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடித்து வருகிறார். அதே நேரத்தில் தற்போது அவ்வபோது சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா (Social Media) பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார் வனிதா. மேலும் தன் சொந்த பெயரில் யூடியூப் சேனல் துவங்கி அதில் அடிக்கடி வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். 

ALSO READ | இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அவர் காளி வேடமிட்டு வனிதா ஷேர் செய்த போட்டோ பெரும் வைரலானது. 

இந்நிலையில் தற்போது அவர் தன் வீட்டில் லக்ஷ்மி குபேரன் பூஜை நடத்தியிருக்கிறார். பூஜையின்போது வனிதாவும், அவரின் மகளான ஜோவிகாவும் பண மாலை அணிந்துள்ளனர். பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

ALSO READ | மீண்டும் காதலில் சிக்கிக்கொண்டாரா வனிதா விஜயகுமார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *