1603607515 pic Tamil News Spot
Share on Social Media

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமாரின் வாழ்க்கையே மாறிவிட்டது. தொடர்ந்து வேலையில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையே லாக்டவுனில் தன் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

பீட்டர் பாலை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் பிரச்சனையாகியுள்ளது. வனிதா தன் பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பீட்டர் பால் மது அருந்தியதை பார்த்த வனிதா கடுப்பானார்.

சென்னை திரும்பிய பிறகு பீட்டர் பால் வீட்டிற்குள் வராமல் ஓடிவிட்டாராம். தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறாராம் பீட்டர் பால். அவர் வீட்டிற்கும் வருவது இல்லையாம், செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளாரம். காதல், திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்து பீட்டர் பாலை திருமணம் செய்து ஏமாந்துவிட்டேன் என்று கூறி வனிதா கண்ணீர் வடித்தார்.

பீட்டர் பாலுக்கு தன்னைவிட மது தான் முக்கியமாகிவிட்டது என்றார் வனிதா. பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட வனிதா, பீட்டர் பால் விவகாரம் தான் சுவாரஸ்யமாக இருப்பதாக சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர். மேலும் வனிதாவை விருந்தாளியாக பிக் பாஸ் 4 வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வனிதா பாஜகவில் சேரப் போவதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் விஷால், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், வடிவேலு ஆகியோர் பாஜகவில் சேர்கிறார்கள் என்று தகவல் வெளியானது. அதை பார்த்துவிட்டு அவர்கள் நாங்கள் பாஜகவில் சேரவில்லை, இது வெறும் வதந்தி, யார் தான் இதை எல்லாம் கிளப்பிவிடுகிறார்களோ என்றார்கள். ஆனால் வனிதா விஷயத்தில் அப்படி இல்லை என்று சொல்லப்படுகிறது.

வனிதா தங்கள் கட்சியில் சேரவிருப்பதாக பாஜக வட்டாரத்தை சேர்ந்தவர்களே தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவலை வனிதா விஜயகுமார் இதுவரை உறுதி செய்யவில்லை. அதனால் அவர் உறுதி செய்யும் வரை இதை நம்ப முடியாது.

அக்கா, நீங்கள் பாஜகவில் சேரப் போகிறீர்களாமே என்று சிலர் வனிதாவிடமே சமூக வலைதளத்தில் கேட்டுள்ளனர். ஆனால் அந்த கேள்விக்கு வனிதா பதில் அளிக்கவில்லை. பீட்டர் பாலை பிரிந்த பிறகு வனிதா தன் முழு கவனத்தையும் வேலை பக்கம் திருப்பியிருக்கிறார். தன்னால் சிரிக்கக் கூட முடியாத இந்த நேரத்தில் வேலை தான் நிம்மதி அளிப்பதாக வனிதா கூறியுள்ளார்.

இந்த சோகத்திலும் எப்படி வனிதாக்கா உங்களால் இதை செய்ய முடிந்தது?

தொடர்ந்து தன் வேலை பற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் வனிதா.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *