Share on Social Media

வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.  

தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை (Valimai) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டுமென வீதிவீதியாக கொடி பிடிக்கத் தொடங்கினர் அஜித் (Ajith Kumar) ரசிகர்கள். இதனால், போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ALSO READ | வலிமை திரைப்படம் குறித்த தரமான அப்டேட்!

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். அதுமட்டும் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

 

இதற்கிடையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார். வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளார்.

ALSO READ | தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *