Share on Social Media


வலிமை டிரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்றைய நாள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆண்டுக்கணக்கில் அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு, அஜித்குமார் – போனிகபூர் மற்றும் இயக்குநர் வினோத் குமார் கூட்டணி விருந்து வைத்துள்ளது. பைக் ரேஸூடன் ஆக்ஷன் பேக்காக தொடங்கும் டிரெயலர் முழுவதும் ஒரே சரவெடியாக இருக்கிறது.

ALSO READ | இது வலிமை படத்தின் வேற மாதிரி அப்டேட்: சூடு பிடிக்கும் பட ரிலீஸ்

காவல்துறையாக வரும் அஜித் பேசும் சில வசனங்கள், மிகவும் நேர்த்தியாகவும், சமூகத்திற்கு நல்ல கருத்துகளை விதைக்கும் வகையிலும் உள்ளது. குறிப்பாக, எண்கவுண்டர் தொடர்பாக அஜித் பேசும் ஒரு வசனத்தில் ‘நமக்கு உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை, வலிமைன்றது அடுத்தவன காப்பாத்துறத்துக்கு தானே தவிர, அழிக்கிறதுக்கு இல்ல’ என கூறுவது பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் ரசிக்க வைக்கிறது,

அதேநேரத்தில் வில்லன்களை பிடிக்க அஜித் போடும் பிளான் முதல் பைக் ரேஸ் காட்சிகள் வரை அனைத்து சீன்களும் அல்டிமேட் அக்ஷனாக திரையில் வந்திருக்கிறது. இந்த டிரெய்லரைப் பார்த்த திரைப்பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஸ் கல்யாண் உள்ளிட்டோரும், இயக்குநர் விக்னேஷ் சிவன், சிம்புதேவன் உள்ளிட்டோர் புகழ்ந்து தள்ளியுள்ளனர். பொங்கல் விருந்து தயாராகிவிட்டதாகவும், திரையில் வலிமையைக் கொண்டாட இப்போதே தயாராகலாம் என்றும் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

ALSO READ | இது வலிமை படத்தின் வேற மாதிரி அப்டேட்: சூடு பிடிக்கும் பட ரிலீஸ்

இதனிடையே. வலிமை டிரெய்லர் வெளியிட்டப்பட்ட சில மணிநேரங்களிலேயே 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. யூ டியூப் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.