Share on Social Media

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ALSO READ | Valimai: வலுவாய் தடம் பதித்தது தல அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக்

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது. 

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு போஸ்ட் அதுக்கு நீங்க ரெடியா என ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு போலி ஐடி எனத் தெரியாமல் பல ரசிகர்கள் ஏமாந்துள்ளனர். ரசிகர்களை விட பிரபல நடிகர் ஒருவர் இந்த பதிவால் ஏமாந்தது அனைவருக்கும் அதிர்ச்சியானது. அந்த நடிகர் மனோபாலா ஆவார். ஐ அம் வெயிட்டிங் என அந்த போலி பதிவில் பதில் அளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அது போலி ஐடி என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

 

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *