Share on Social Media


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘வலிமை’ படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் கார்த்திகேயா.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் ‘வலிமை’ குறித்து படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா கூறும்போது, நான் ராஜா விக்ரமர்கா ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போதுதான் எனக்கு வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அஜித் சார் – எச். வினோத் காம்போவில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு வந்ததை பெரும் ஆச்சரியமாக உணர்ந்தேன். படத்தின் ஸ்க்ரிப்டை மிகச் சிறப்பாக இயக்குனர் எச். வினோத் எழுதியிருந்தார். படத்தில் அஜித் சார் போலீஸ். நான் கிரிமினல்.

‘ஜெய் பீம்’ படத்தில் நடித்த சிறுமி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாரா?: வெளியான பரபரப்பு தகவல்!
அஜித் சார் ஒரு மிகப்பெரும் நட்சத்திரம். ஷூட்டிங் தொடங்கியபோது எனக்கு புதுவிதமாக இருந்தது. அஜித் சார் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார். அவர் படப்பிடிப்பின் போது எல்லோரையும் சமமாக நடத்துவார். எல்லோருக்கும் உதவியாக இருப்பார். இப்படியொரு பெரிய நட்சத்திரம் இனிமையாக பழகினால், படக்குழுவில் இருக்கும் எல்லோரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

எனக்கு துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அஜித் சார்தான். புல்லட்டுகளை எப்படி மாற்றுவதையும் அவர் எனக்கு கற்றுத் தந்தார். இது படப்பிடிப்பு முழுவதும் எனக்கு உதவியாக இருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் படமாக வலிமை உருவாக்கப்பட்டுள்ளது. எமோஷனல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எச். வினோத் அவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக வலிமை இந்திய சினிமாவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

“விநோதய சித்தம்” நாடகம் – உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *