Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மீண்டும் படங்களில் நடிக்க வரும் வடிவேலு
  • கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்த வடிவேலு

சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு. இயக்குநருடன் பிரச்சனை ஏற்படவே அந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது தயாரிப்பாளர் சங்கம்.

கொரோனாவால் உங்களுக்கு எல்லாம் ஒரு வருஷமா தான் லாக்டவுன், எனக்கோ பத்து வருஷம் என்று வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் கண் கலங்கினார். அவர் பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும், மீம்ஸுகள் மூலம் நம்மை எல்லாம் தினமும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 24ம் புலிகேசி படத்தை தூசு தட்டுகிறார்கள், வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்று அண்மையில் தகவல் வெளியானது. வடிவேலுவை மீண்டும் பெரிய திரையில் பார்க்கப் போகிறோம் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது.

இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த வடிவேலு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது, திமுகவுக்கு பிரச்சாரம் செய்தபிறகு தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது என்று கருத்து இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. மீண்டும் பழையபடி அதிகமான திரைப்படங்களில் உங்களை பார்க்கலாமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, கண்டிப்பா. நல்லதே நடக்கும் என்று பதில் அளித்தார் வடிவேலு.

அவர் அளித்த பதிலை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள். அதே சந்திப்பில், அரசியல் எல்லாம் வேண்டாம் என்று வடிவேலு கூறியதை பார்த்த ரசிகர்களோ, இந்த தெளிவு போதும், இனி நீங்கள் பெரிய உயரம் தொடுவீர்கள் என்கிறார்கள்.
இந்த குட்டிப் பாப்பா தான் நயன்தாரானு சொன்னா நம்புவீங்களா?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *