Share on Social Media


வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பேசியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

24ம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்து முடிவுக்கு வந்து தற்போது லைக்காவுடன் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் வடிவேலு. செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை பகிர்ந்த வடிவேலு இனிமேல் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளதாக தெரிவித்தார். மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் வடிவேலு கூறினார்.

திரைத்துறையில் இந்த பிரச்சனைகளை தீர்க்க வடிவேலுவுக்கு அரசியல் ரீதியான உதவிகளும் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் தான் தனக்கு நல்ல காலம் பிறந்ததாகவும் வடிவேலு தெரிவித்தார். இதனால் திமுக சார்பாக வடிவேலுக்கு மறைமுகமாக உதவிகள் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மது பாட்டிலுடன் குத்தாட்டம் போடும் நடிகை அமலா பால்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வடிவேலு இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என கூறபடுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சதீஷ் நடித்து வரும் படத்திற்கு இந்த டைட்டிலைவைத்துள்ளனர். இதனால் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ‘என்கிற டைட்டிலில் வடிவேலு நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *