Share on Social Media


வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்தப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் வைத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அண்மையில் வெளியிட்டனர். இதனால் வடிவேலு படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப்படும் என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்கிற பெயர் வைத்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதில் வடிவேலு கெத்தாக 5 நாய்களுக்கு நடுவே கோட் சூட்டுடன் அமர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

சூர்யா படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
லைகா பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். அண்மையில் இவர் குடும்பத்துடன் நடிகர் வடிவேலுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்தப்படத்தில் வடிவேலுவுடன் நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரிஜினல் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. ‘நாய் சேகர்’ என்ற டைட்டில் யார் வைத்தாலும் தான் மட்டுமே ஒரிஜினல் என்பதை சூசகமாக படத்தின் டைட்டிலிலே வடிவேலு குறிப்பிட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *