Share on Social Media


 

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு மாத காலத்தில் பதிவான அதிக அளவிலான ஒரு தொற்று பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம் தான்  இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

எனினும் நாடு தழுவிய லாக்டவுன் (Lockdown) எதுவும் அறிவிக்கப்படாது அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்  இந்த வாரம் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மக்களிடடையே உரையாற்றுகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் எனவும், வதந்திகளைக் நம்பாமல், நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்” என்றும் வலியுறுத்தினார்.

கொரொனா தடுப்பூசி (Corona Vaccine) போடுவதில் மக்கள் காட்டும் தயக்கம் ரஷ்ய அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கிய முதல் ரஷ்ய நகரமாக மாஸ்கோ திகழ்கிறது.

ரஷ்யாவில் இது வரை மொத்தம், 50.6  லட்சம் மக்கள் இதுவரை கொரோனாவினால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரை மொத்தம் 1,37,925 பேர் இறந்துள்ளனர் எனவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 50,68,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது 4,04,115 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ | COVID UPDATE: நேற்று மட்டும் 43,071 பேருக்கு கொரோனா; 955 பேர் பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.  இதுவரை உலக அளவில் 18.42 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 39.89 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *