Share on Social Media


உலகிலேயே கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 1.81 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுடன் போராடி வரும் அமெரிக்காவுக்கு கடந்த வாரம் மிக மோசமான வாரமாக இருந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஏழு கண்டங்களையும் கைப்பற்றிய கொரோனா!

டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாட்களில் அமெரிக்காவில் கொரோனாவால் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய வாரத்தை காட்டிலும் கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 6.7% உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ஆய்வு கூறுகிறது.

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வெளியே பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்க விமான நிலையங்களில் 32 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

‘பிகில்’ விஜய் தொடர்பான வழக்கில் திருப்பம்!

விடுமுறை விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தால், மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர். இன்னும் ஒரு சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு என்ன உச்சத்தை எட்டுமோ என அச்சம் உருவாகியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *