Share on Social Media


உலகளவில் கொரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 1.55 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.90 லட்சத்துக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் கோவிட்-19 கொள்ளை நோயால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 ட்ராக்கிங் பிராஜக்ட் வெளியிட்டுள்ள தகவல்படி, நேற்று (டிசம்பர் 9) ஒரே நாளில் அமெரிக்காவில் 3,054 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

டிகிரியை தூக்கிப் போடு; தேள், பாம்பைப் புடிங்க – கோடிகளில் கொட்டும் வருமானம்!

இதற்கு முன் அமெரிக்காவில் கொரோனாவால் இந்த அளவுக்கு ஒரே நாளில் உயிர்பலிகள் ஏற்படவில்லை. கடைசியாக மே 7ஆம் தேதியன்று ஒரே நாளில் கொரோனாவால் 2,769 பேர் பலியாகினர். அதற்கு பின் நேற்று கொரோனா உயிர்பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதுபோக, நேற்று மட்டும் 18 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 106,688 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 உயிர்பலிகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு வார சராசரி உயிர்பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஏழைகளுக்கு உதவ சொத்துக்களை அடமானம் வைத்து ரூ. 10 கோடி கடன் வாங்கிய நடிகர்

உலகளவில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் கொரோனாவுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவில் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *