Share on Social Media


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் போன்ற முண்ணனி நடிகர்களின் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘இந்தியன்’. இந்தப் படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வசூலைப் பெற்றது.  இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 தொடங்கப்போவதாக 2017-ல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளன்று (நவம்பர் 7) இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது .

இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பல சிக்கல்கள் ஏற்பட்டு ஒருவழியாக அனைத்தும் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதத்திலிருந்து படத்தின் பணிகளை எவ்வித தடையும் இல்லாமல் முழுமூச்சாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.  ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.  அதனால் காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு கதாநாயகியை தேர்வு செய்ய படக்குழு யோசித்தது.

trish

அதுமட்டுமல்லாது இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார்.  அவரின் காட்சிகளும் முழுமையடையாததால் அந்த கதாபாத்திரத்திற்கு வேறொருவரை மாற்றும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு மாற்றாக நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க இந்தியன்-2 படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே நடிகை த்ரிஷா மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   தற்போது கமல் விக்ரம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *