Share on Social Media

 

Tokyo Olympics: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய நான்கு போட்டிகளில் இது இந்தியாவின் மூன்றாவது வெற்றியாகும். இந்தியா 9 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இதை அடுத்து குழு A அணிகளில் இரண்டாவது இடத்தில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியின் அசத்தல் வெற்றி

இந்தியாவின்  வருண் குமார், ஆட்டத்தின் 43 வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத் 58 வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 59 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 48 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்காக ஷூத் காசெல்லா ஒரே ஒரு கோல் அடித்தார். 

Also Read | sex at Olympics: ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு

இந்த வெற்றியை அடுத்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இப்போது இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், நேற்று வெளியான தகவல்களின் படி, டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 16 பேருக்கு புதிதாக COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு ஏற்பாட்டாளர்கள்  அறிவித்துள்ளனர், இருப்பினும், அவர்களில் யாரும் விளையாட்டு வீரர்கள் அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர். இந்த 16 பாதிப்புகளையும் சேர்த்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. நான்கு நாட்களில் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | மகளிர் குத்துச் சண்டை போட்டியில் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *