Share on Social Media

6 அடி உயரமும் 103 கிலோ எடையும் கொண்ட இவருக்கு 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிவதெல்லாம் சர்வ சாதாரணம். இந்த சீசனில் மட்டும் ஏழு முறை 90மீ தாண்டி வீசியுள்ளார். வெட்டரின் சமீபத்திய வெற்றிகள், அவரை ஈட்டி எறிதல் போட்டியில் மிகச்சிறந்த வீரராக கருதப்படுபவரும் உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான ஜேன் ஜெலஸ்னியோடு ஓப்பீடு செய்ய வைத்துள்ளது. 1995-ம் ஆண்டில் ஜேன் ஒரே சீசனில் 14 முறை 90 மீட்டருக்கு மேல் வீசியதே இன்றுவரை சாதனையாக உள்ளது.

கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு வருடம் கழித்து நடைபெற உள்ள நிலையில், 28 வயதாகும் இவருக்கு ‘கன்சிஸடன்சி’ என்பது பெயரோடு ஒட்டிப் பிறந்தது போல. குறுகிய காலத்திற்குள்ளேயே, தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் 90 மீட்டருக்கு மேல் வீசி வெற்றி வாகை சூடியுள்ளார். ஜெலஸ்னி மட்டுமே ஒரே வருடத்தில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.

Johannes Vetter

ஓக் மரம் போன்ற உடலும், எருது போன்ற வலிமையும் கொண்டவர் என வர்ணிக்கப்படும் வெட்டரிடம் ஈட்டி எறிதலுக்கு தேவையான உத்தியும் ஆற்றலும் ஒருங்கே அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு காற்றின் வேகமும் வெப்பநிலையும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக இருக்கும். ஆனால் வெட்டருக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. இவை இரண்டையும் மீறி அவர் வெற்றி வாகை சூடுகிறார். வெட்டரால் உலக சாதனை எப்போது தகர்க்கப்படும் என்பதே இப்போது எல்லார் முன்னும் இருக்கும் ஒரே கேள்வி. நீண்ட நாளாக தகர்க்க முடியாமல் இருக்கும் இந்த உலக சாதனையை இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் வெட்டர் முறியடிப்பார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அவருடைய உத்தி மேம்பட்டுள்ளது. முக்கியமான பகுதிகளில் நிலை தடுமாறாமல் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர் உலக சாதனை படைப்பார். அது இந்த வருடம் கூட நடக்கலாம். இப்போதைக்கு அவர் அளவிற்கு தூரம் வீசும் வீரர் யாரும் இல்லை” என்கிறார் யூவ் ஹோன். ஈட்டி எறிதலில் 100மீ தாண்டி எறிந்த ஒரே வீரர் இவர் மட்டுமே. தற்போது இந்திய ஈட்டி எறிதல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஹோன், 1984ம் ஆண்டு 104.80மீ வீசியதே இன்றளவும் உலக சாதனையாக இருக்கிறது. யாரும் அவ்வுளவு சீக்கிரத்தில் முறியடிக்க முடியாத உலக சாதனையாக இது கருதப்படுகிறது.

705f053f 6ba6 44e9 91d2 378994d75c67 Tamil News Spot
Johannes Vetter

தனிப்பட்ட அளவில் இழப்புகளையும் காயங்களையும் சந்தித்தாலும் இதையெல்லாம் மீறி இந்த வருடம் உச்சகட்ட பார்மில் உள்ளார் வெட்டர் 2017ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெட்டர் தங்கம் வென்ற சமயத்தில், அவருடைய அம்மா உடல்நலமில்லாமல் இருந்தார். சொல்லப்போனால் மிக கடினமான சூழலுக்கு இடையேதான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார் வெட்டர்.

“உலக சாம்பியன்ஷிப் தொடங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில்தான் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. நானும் காயங்களால் அவதிப்பட்டேன். நான் தங்கப்பதக்கம் வென்றதும், சந்தோஷத்தில் ஸ்டேடியத்தை சுற்றி ஓடினேன். அப்போது கூட்டத்தில் என்னுடைய அப்பா இருப்பதை பார்த்துவிட்டேன். அம்மாவோ உடல்நலக்குறைவால் மருத்துவமணையில் இருக்கிறார். நானும் மனவேதனையில் இருந்தேன். ஆனால் இந்தச் சமயத்திலும் என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக நிற்பதை பார்த்து எனக்கு அழுகை வந்துவிட்டது” என உணர்ச்சிகரமாக நினைவுகூர்கிறார் வெட்டர்.

2018 இறுதியில் வெட்டரின் அம்மா இறந்துவிட்டார். சிகிச்சை அளித்தாலும் அவர் இறந்துவிடுவார் எனக் குடும்பத்திற்குத் தெரிந்தே இருந்தது. “அந்தச் சமயத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கஷ்டத்தை சந்தித்து வந்தேன். என்னுடைய விளையாட்டிலும் கடினமான சூழல் நிலவியது. உண்மையில் இதை சமாளிக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்கிறார்.

Also Read: Tokyo Olympics : மனு பாக்கர்… சீறிப்பாயும் தோட்டாவுக்கு பின்னால் ஒரு சஞ்சலமற்ற நதி!

வெட்டரின் இடது கணுக்கால் ஏன் தொந்தரவுக்குரியதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதிலேயே 2019-ம் ஆண்டின் பாதிப்பகுதி செலவாகிவிட்டது. தோகா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெட்டரால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. நான்கு நாள் கழித்து அறுவை சிகிச்சைக்குத் தயாரானார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்த பிறகே, கடந்த இரண்டு வருடங்களில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சிந்தித்து பார்க்க நேரம் கிடைத்தது. இந்த இடைபட்ட ஓய்வுக்காலம் அவரை புதுமனிதனாக செதுக்கியது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *