Share on Social Media


தற்போது திரையரங்குகளை காட்டிலும் பெரும்பாலான படங்கள் OTTயிலேயே தான் ரிலீஸ் ஆகுகின்றன.  இருப்பினும் மக்களிடையே இது போன்ற இயங்குதளங்களுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கிறது.  அந்த வகையில் இன்று OTT இயங்குதளத்தில் 14 படங்கள் ரிலீசாகின.

ALSO READ இது வேற லெவல் அப்டேட்! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1) ருத்ர தாண்டவம் : திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கிய படம் தான் “ருத்ர தாண்டவம்”.  இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிசி மற்றும் கதாநாயகியாக தர்சா குப்தா நடித்துள்ளனர்.  மேலும் இதில் கௌதம் மேனன், ராதாரவி, தம்பி ராமையா, ஒய். ஜி. மகேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சட்டத்தை தவறான வகையில் பயன்படுத்துதல், சிறுவர் மற்றும் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு ஆளாக்குதல், மதமாற்றம் செய்தல் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  வழக்கம்போல இந்த படத்திற்கும் சில தரப்பினர் ஆதரவையும், சில தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.  

2) பொன் மாணிக்கவேல்: A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் “பொன் மாணிக்கவேல்”.  இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா மற்றும் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இதில் சுரேஷ் சந்திர மோகன், மகேந்திரன், வின்சென்ட் அசோகன், பிரபாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  சிலை திருட்டு வழக்கில் திறமையாக செயல்பட்ட ஐஜி.பொன்மணிக்கவேலை பிடித்ததால் இவரது பெயரை படத்திற்கு வைத்துள்ளனர்.  இது பிரபு தேவா நடிக்கும் 50-வது படமாகும்.  இந்த படம் இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் இயங்குதளத்தில் ரிலீஸ் ஆனது.

3) மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (Most Eligible Bachelor) : பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் உருவான தெலுங்கு ரொமான்டிக் படம் தான் “Most Eligible Bachelor”.  இந்த படத்தில் கதாநாயகனாக அகில் அக்கினேனி மற்றும் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.  இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போனது.  இந்த படம் இன்று ஆஹா இயங்குதளத்தில் இன்று வெளியானது.

4) சுருளி : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான அறிவியல் கலந்த த்ரில்லர் படம் தான் “சுருளி”.  ஒரு குற்றவாளியை தேடி செல்லும் இரு போலீசார் செல்கின்றனர், அப்போது ஏற்படும் திகில் நிறைந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை.  இதில் செம்பன் வினோத் ஜோஸ், வினய் போர்ட், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் இன்று சோனி லிவ் இயங்குதளத்தில் வெளியானது.

5) தமாகா (Dhamaka) : இந்த படம் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் “Dhamaka”.   இந்த படம் இன்று Netflix இயங்குதளத்தில் வெளியானது

6) தி கிரேட் சீசன்-2 : இது ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட நாடகமாகும்.  நகைச்சுவையான சீரிஸ் ஆன  இது இன்று hulu இயங்குதளத்தில் வெளியானது.

TheGreatSeason2GillianAndersonElleFanning

7) தி வீல் ஆப் டைம் : இது ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும்.  இது இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

8) கவ்பாய் பெபாப் : இது சாகசம், கிரைம் கலந்த அதிரடி நிறைந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும்.  இது ஜப்பானிய தொடர் ஒன்றின் தழுவல்.  இந்த சீரீஸ் இன்று Netflix இயங்குதளத்தில் வெளியானது.

9) ஹெல் பௌண்ட் : இது கொரிய தொலைக்காட்சி தொடராகும்.  அதிரடி காட்சிகள் நிறைந்து உருவாக்கப்பட்ட இந்த சீரீஸ் இன்று Netflix இயங்குதளத்தில் வெளியானது.

10) மண்டார் (Mandaar ): இது ஒரு பெங்காலி தொடராகும்.  இது இன்று Hoichoi இயங்குதளத்தில் வெளியானது.

11) ஓக சின்னா பேமிலி ஸ்டோரி (Oka chinna family story ): இது தெலுங்கில் உருவாக்கப்பட்ட காமெடி கலந்த குடும்ப கதை.  இந்த படம் இன்று Zee5 இயங்குதளத்தில் வெளியானது.

Oka-Chinna-Family-Story-Series-OTT

12) தி மைண்ட் எக்ஸ்பிளேன் சீசன் 2 ( The mind explained season 2) : இது ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம்.  இது இன்று  Netflix இயங்குதளத்தில் வெளியானது.

13) பிலௌன் அவெ (blown away christmas ) : கிறிஸ்துமஸ் பண்டிகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கில தொடராகும்.  இது இன்று  Netflix இயங்குதளத்தில் வெளியானது.

14) டிக் டிக் பூம் (tick tick bhoom) : இது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆங்கில தொடராகும்.  இது இன்று  Netflix இயங்குதளத்தில் வெளியானது.

ALSO READ ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினி, கமல் திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *