Share on Social Media

பந்துக்கு வாய் இருந்தால் பட்ட கதை சொல்லி இருக்கும், அந்த அளவுக்கு அடி மேல் அடி வாங்கி, பலமுறை பவுண்டரி லைனிடம், அடைக்கலம் புகுந்தது. “நானே வருவேன்” என ஷாருக்கானே வர, “உங்களுக்கு ஸ்பெஷலாகத் தருவோம்”, என அவரது ஓவரில், 18 ரன்களை மானாவாரியாக அடித்தனர்.

மறுபுறம், நிஷாந்த் அரைசதம் கடக்கவில்லை, ஆனாலும் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்து, 20 பந்துகளில், அரைசதம் அடித்தார், குட்டி கிறிஸ் கெய்ல் மணிபாரதி. அதன்பின்தான், 29 பந்துகளில், மெகா சைஸ் சிக்ஸரோடு வந்து சேர்ந்தது. நிஷாந்தின் அரைசதம்.

TNPL | #LKKvDD

TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague

இந்தச் சமயத்தில், ஸ்கோரை மட்டும் பார்க்க வந்தவர்கள், மிரண்டு போய் இருப்பார்கள். நடப்பது உண்மையா, பொய்யா, கனவா, நனவா?! என ஸ்தம்பித்துப் போய் இருப்பார்கள்! ஆனால், அது கதையல்ல நிஜம்! அதற்குப் பின், பார்த்தவர்கள் சேனலை மாற்றி இருக்க மாட்டார்கள்.

இந்த நிலையிலேயே, ஏழு ஓவர்கள் எஞ்சியிருக்க, 34 ரன்கள் மட்டுமே தேவை என்று இலக்கு ஓடிவந்து அருகில் அமர்ந்து கொண்டது. ஆனால், அப்பொழுதுதான் ஒரு சுவையான இன்னொரு சம்பவமும் நடந்தது. “வீசித்தான் பார்க்கட்டுமே!”, என கங்கா ராஜுவின் கைகளில், பந்தைக் கொடுத்தார் ஷாருக்கான். அவருக்கும் பவுண்டரி வரவேற்புக் கிடைத்தாலும், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், மணி பாரதியை ஆட்டமிழக்கச் செய்தார், ராஜு. அடுத்த அதிர்ச்சியாக, வந்த வேகத்தில் விவேக்கையும் அவர் அனுப்பி வைக்க, ஆட்டம் சூடு பிடித்தது.

இதற்கடுத்த ஓவரில், செல்வக் குமரன் வீசிய மூன்று பந்துகளில், இரண்டு விக்கெட்டுகள் வீழந்தன. அதில், செட்டில் ஆகியிருந்த ஹரி நிஷாந்த்தின் விக்கெட்டும் ஒன்று.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *