Share on Social Media


தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப். 10) வெளியிட்ட அறிவிப்பில்,  “தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியல் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ALSO READ | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு அல்லது வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில், இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை  பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | இடா புயல் எதிரொலி – சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *