Share on Social Media


வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழப்பு. வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் கஸ்பா பஜார் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்சர் – சுரையா தம்பதியினர். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஆப்ரின் (4), அசன் (3) என்று இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று (டிசம்பர் 07) முதல் இன்று (டிசம்பர் 08) காலை வரை இரு குழந்தைகளுக்கும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!!

இந்நிலையில், இன்று (டிசம்பர் 08) காலை 7.30 மணி அளவில் குழந்தைகளை தர்காவிற்கு தாயத்து கட்டுவதற்காக கூட்டிச்சென்றுள்ளனர். தொடர்ந்து பிரச்சனை நீடித்ததால் கஸ்பா பகுதியில் உள்ள ‘மஹி’ என்ற மெடிக்கல் ஷாப்பில் இரு குழந்தைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். மருந்தை சாப்பிட்ட சற்று நேரத்தில் குழந்தைகள் சுயநினைவு இழந்துள்ளன.

தொடர்ந்து பிற்பகல் 12 மணி அளவில் வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் உடலை உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ | குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி ₹6.30 கோடி மோசடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *