Share on Social Media


தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டன. கடந்த மே மாதம் பிளஸ்-2  (12th Exam Results) பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt) அறிவித்தது.

மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றன. 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண்களை பதிவிற்க்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மதிபெண்களை எந்த இணையத்தில் பார்ப்பது
1. www.tnresults.nic.in 
2.www.dge1.tn.nic.in 
3. www.dge2.tn.nic.in 
4. www.dge.tn.gov.in

ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மதிப்பெண் கணக்கீடு முறை
* எஸ்எஸ்எல்சி வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
* 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். 
* 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.

மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் வழங்கப்படும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வை எழுத அரசு வழிவகை செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *