Share on Social Media


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நிவர் மற்றும் புரேவி ஆகிய இரண்டு புயல்களால் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு 8 நாட்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும், இதில் ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ஆகும் செலவு ரூ.150 என்றும், 8 நாட்களுக்கும் உணவுக்கான செலவு ரூ.1200 என்றும், ஆக 8 நாட்களுக்கு 26 லட்சம் பேருக்கு ஆகும் செலவு ரூ.312 கோடி என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 26 இலட்சம் பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. முறையாக அரசு அலுவலர்களை வைத்து வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

10 கிலோ அரிசியை வைத்து, சமைத்த உணவை 1000 பேருக்கு வழங்கியுள்ளோம் என்று, அதிமுகவின் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.கந்தன், விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி இன்னும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கொடி கட்டிவைத்து, சோழிங்கநல்லூரில் பொதுமக்களுக்கு வழங்கியதாக உணவு வழங்கும் புகைப்படங்களையும் போட்டு முகநூலிலும் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆணையரிடம், இது மக்கள் பணம், அரசின் பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தொலைப்பேசி மூலம் புகார் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர், ‘நான் குறிப்பு அனுப்பி, நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஆனால் நேற்று இரவும், காலையிலும் அதேப்போல் கட்சி நிர்வாகிகளை வைத்தே இரவு நேரங்களில் உணவு பொட்டலங்களை வழங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதன்மூலம் ரூ.312 கோடி மாநகராட்சி பணம் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அண்மையில் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மகள் கல்லூரி மாணவி இருவரும் மதுரவாயல் அருகே சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அருகில் மூடாமல், பணிகள் நடைபெறாமல் இருந்த மழைநீர் வடிகால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளனர் என்பதற்கு மதுரவாயல் முதல் வாலாஜா சாலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நேற்றையத் தினம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிலே, Monumental Poor Road என்று நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.

வந்துவிட்டது மெகா அறிவிப்பு: தளபதி 65 படத்தை இயக்கும் நெல்சன்

சுங்கச்சாவடிகளில் வசூல் கொடிகட்டி பறந்துவருகிறது. சென்னை, துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் மூலம் மக்களிடம் சுரண்டுகின்ற செயல் நடைபெற்று வருகிறது. விதிகளுக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி, பிப்.10ஆம் தேதி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடம் மனு அளித்தபோது, அதற்கு பதில் அளித்த அமைச்சர், தேசிய நெடுஞ்சாலையில் இருந்தால்தான் நாங்கள் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம். இது மாநகராட்சி சம்மந்தப்பட்டதால் நீங்கள் முதலமைச்சரிடம் புகார் அளியுங்கள் என்று தெரிவித்ததன் காரணமாக, அமைச்சரிடமும் இது குறித்து மனு அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், மத்திய சட்ட விதிகளுக்கு புறம்பாக இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய இந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் (15-11-2020) அளித்துள்ளார். இவ்வாறு புகார் அளித்து, 10 மாதங்கள் கடந்து உள்ள நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான், திமுக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கரை சுங்கச்சாவடி அருகே நாளை காலை 10 மணியளவில், பொதுநலச் சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட திமுக செயல் வீரர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டமான அளவில் ஓர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *