Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6 – 19 வரை தேர்வு
  • அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தமிழகத்தில், 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
12-ம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு எழுத விரும்புவோர் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை மாவட்டங்களில் உள்ள தேர்வுத் துறை உதவி இயக்குநரகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
“ஆக்சிஜன் ஆணையர்” – 3வது அலையை சமாளிக்க தமிழக அரசு புது வியூகம்!
மேலும், விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 19-ம் தேதி, தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *