Share on Social Media


​குடிக்க மாட்டேன்

குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டே ஆக வேண்டும் என்று விரும்பினாலே நீங்கள் 50% வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று சொல்லலாம். இந்த பாதையில் நீங்கள் வெற்றிபெற விரும்பினால் யாரும் உதவ மாட்டார்கள். நீங்கள் தான் தயாராக வேண்டும்.

Arthritis : மரபியலும் வாழ்க்கை முறையும் எப்படி மூட்டுவலியை உண்டாக்குகிறது? விவரம் அறிவோம்!

நாளையிலிருந்து குடிக்க மாட்டேன் என்று சொல்வதை விட் இப்போதிருந்து செய்யமாட்டேன் என்று முடிவெடுங்கள். நீங்கள் தயங்கினால் உங்கள் முடிவை தள்ளி வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால் உங்களிடம் இருக்கும் சக்தியை திரட்டி குடிப்பழக்கம் இல்லாத வாழ்க்கையை உறுதி செய்யுங்கள். ஒரு பெக் போடு என்பவரிடம் ஓராயிரம் அடி தள்ளி நில்லுங்கள்.

​உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

samayam tamil Tamil News Spot

உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றாலும் இனி அதை பின்பற்றுங்கள். உடற்பயிற்சி மிக சக்தி வாய்ந்த கருவி. உடலின் ஒட்டுமொத்த சக்தியும் கவனமும் உடற்பயிற்சி மூலம் திரும்புவதால் பல தீய பழக்கங்களிலிருந்து விடுபட முடியும்.

வாழ்க்கை முறையை திசை திருப்புவதன் மூலம் உடல் உறுதியாக பலமாக ஆவதன் மூலம் உங்கள் மீது உங்களுக்கே மதிப்பு வரும். கோபம், பதற்றம், மன உளைச்சல் இவற்றையெல்லாம் தடுக்க உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

​சுயமரியாதையை வளர்த்துகொள்ளுங்கள்

samayam tamil Tamil News Spot

சுயவெறுப்பு, கழிவிரக்கம் இவையெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் கட்டாயமாக இருக்கும். அதனால் தான் இந்த பழக்கத்தை கைவிடுவதற்கும் இவையே தடையாக உள்ளது. குடிப்பழக்கம் வீட்டிலும் சமூகத்திலும் அவர்களது சுயமரியாதையை குறைக்கும் என்பதை அடிக்கடி உணருங்கள்.

சுய மரியாதைதான் பலம் என்பதை உணர்ந்தாலே எளிதாக விடுபட முடியும். உங்கள் குடிப்பழக்கத்துக்கு முந்தைய ஆரோக்கியமான தோற்றத்தை திரும்ப கொண்டு வருவதன் மூலம் தன்னம்பிக்கை பெறலாம்.

​கூடா நட்பு வேண்டாம்

samayam tamil Tamil News Spot

குடிப்பழக்கத்தை பழகிய நண்பர்களுடன் விலகி இருங்கள். சண்டை போட்டு பிரிய வேண்டாம். நாகரீகமாக பிரிந்து விடுங்கள். சொந்த அல்லது அலுவல் காரணங்கள் ஏதேனும் சொல்லி தவிர்ப்பது நல்லது.

மாறாக உங்களை உற்சாகப்படுத்தும் உறவுகளுடனும் , உங்களை நேசிப்பவர்களுடன் செலவிடுங்கள். சவால் விடும் பொழுது போக்கு செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். பொது நிகழ்வுகளில் கலந்து நேரம் செலவிடுங்கள்.

​பார்ட்டிகளை தவிர்க்க வேண்டாம்

samayam tamil Tamil News Spot

குடிப்பழக்கம் கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் அதை தவிர்க்க விரும்பினாலும் பார்ட்டிகளில் தவிர்க்க முடியாமல் கலந்து கொள்ள நேரிடும். அதனால் குடும்ப விழாக்களாக இருந்தால் உங்கள் மனைவியுடன் விரைவாக சென்று, விரைவாக திரும்புங்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு நேரம் செலவிட வேண்டாம். நண்பர்கள் குடிக்க வேண்டாம் சும்மா கூட இரு என்று சொன்னாலும் அங்கு நீங்கள் இருப்பது விஷப்பரீட்சை தான். அதனால் கடுமையான உறுதியுடன் இருங்கள்.

​மருத்துவ ஆலோசனை நாடுங்கள்

samayam tamil Tamil News Spot

குடிப்பழக்கத்தில் மீளும் பயணத்தில் மீண்டும் அவை நினைவுக்கு வந்தால் சிலர் ஆல்கஹால் குடிப்பது உண்டு. அதனால் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறாமல் நிபுணர் ஒருவரிடம் கவுன்சிலிங் செய்யலாம்.

இவையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஏனெனில் திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்தும் போது உங்கள் உடலுக்கு சில பாதிப்புகள் உண்டாகலாம். அதிலும் நீண்ட காலம் குடித்த ஒருவராக இருந்தால் அவர்களுக்கு உடல் நடுக்கம் போன்றவை ஏற்படும். அதனால் மருத்துவரின் உதவியை நாடுவதில் தவறில்லை.

​சேமிப்பும் கூடும்

samayam tamil Tamil News Spot

தினசரி குடிப்பழக்கத்தை கொண்டிருந்தால் நீங்கள் செலவு செய்யும் பணத்தை கணக்கிட்டு தினசரி ஆகும் செலவை ஓர் உண்டியலில் சேர்த்து வையுங்கள்.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்றது பச்சை அரிசியா ? புழுங்கல் அரிசியா?

ஒரு மாதம் கழித்து அந்த தொகையை கணக்கிட்டு பார்த்தால் இதுவரை நீங்கள் எவ்வளவு செலவழித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து வருத்தப்படுவதோடு இனி மகிழ்வாக சேமிக்கவும் தொடங்குவீர்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *