Share on Social Media

வாழ்நாள் நோய், தொற்றுநோய்களின் தீவிரம் இருக்கும் நிலையில் முறையற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியத்தில் அலட்சியம் போன்றவை தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணங்களாகிறது. சரி இந்த ஆரோக்கியத்தை தக்கவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

​சீரான உணவு முறை

போதுமான அளவு உணவை எடுத்துகொள்வது ஆரோக்கியமானதல்ல. சரியான உணவை தேர்வு செய்வது தான் முக்கியம்.

அன்றாட உணவில் புரதங்கள், தாதுக்கள், இரும்பு, வைட்டமின்கள், கால்சியம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்பு போன்றவற்றை இணைப்பது மிகவும் அவசியம். இவை எல்லாமே உங்கள் உணவு தட்டில் நிறைந்திருக்க வேண்டும்.

மாதவிடாய் நாள் வலியை குறைக்கும் ஆயுர்வேத தேநீர், தயாரிப்பும் பயன்களும்! உடனே ட்ரை பண்ணுங்க!

உணவில் முழு தானியங்கள், பருப்பு வகைகள், பால், பால் பொருள்கள், இறைச்சி வகையில் மீன், கோழி, முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் வரை சீரான உணவு திட்டத்தை பின்பற்ற முடியும்.

​உணவில் கவனம் செலுத்துங்கள்

samayam tamil Tamil News Spot

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கலோரி மற்றும் நிறைவுற்ற மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இது படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடும். இதனால் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் அதிக கொழுப்பு அளவு ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் உடல் பருமன் என்பதற்கு துரித உணவும் காரணங்களாகும்.

நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த பருவகால பழங்களை சரியான காலத்தில் எடுத்துகொள்ள வேண்டும். சுவையான இனிப்புகள் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அளவாக எடுத்துகொள்வது அவசியம். அதனால் உணவில் எப்போதும் ஒரு கவனம் செலுத்துங்கள்.

​காலை உணவை தவிர்க்க வேண்டாம்

samayam tamil Tamil News Spot

வளர்சிதை மாற்ற விகிதத்தை தொடங்க நல்ல தரமான காலை உணவு அவசியம்.சரியான முறையில் காலை உணவை எடுத்துகொள்ளும் போது ஒட்டு மொத்த நாளில் கலோரி அளவு குறைக்க முடியும்.

உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது இளம் பருவத்தினரிடையே ஃபேஷனாகிவிட்டது. ஆனால் இது சுகாதார விளைவுகளை உண்டாக்கும்.

கொட்டைகள் மற்றும் விதைகளிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகளுடன் முழு தானியங்கள், பருவகால காய்கறிகள் மற்றும் புரத மூலத்தை சேர்ப்பது ஆரோக்கியமான காலை உணவாகும்.

​திரவ ஆகாரங்கள் சேருங்கள்

samayam tamil Tamil News Spot

தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலிலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் அதோடு சருமத்தை ஒளிர செய்யும். நீரேற்றத்தின் அளவை பராமரிக்க கிடைக்கும் இடைவேளையில் ஆரோக்கியமான பானங்களையும் தவிர்க்க வேண்டாம்.

​இரவு உணவு தாமதம் வேண்டாம்

samayam tamil Tamil News Spot

இரவு நேர உணவு தாமதமாக இருந்தால் அது உடல் பருமன் மற்றும் வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆய்வு ஒன்றில் மதிய உணவோடு ஒப்பிடும் போது இரவு உணவு குறைந்த தெர்மோஜெனில் விளைவுகளை கொண்டிருப்பதாக காட்டியது. இது முந்தைய எடையை விட அதிகமாக இருப்பதை காட்டியது.

டீன் ஏஜ் பெண்கள் மாதவிடாய் நாளில் மென்சுரல் கப் பயன்படுத்தலாமா? பாதிப்பு உண்டாகுமா?

இரவு நேரங்களில் சாப்பிடுவது காலை எடுத்துகொண்டதை காட்டிலும் குறைவானதாக இருந்தது திருப்திகரமானதாக காணப்படுகிறது. அதோடு தாமதமான இரவு நேர சிற்றுண்டி அஜீரணத்தை உண்டாக்க கூடும். இது உங்கள் தூக்கத்துக்கு இடையூறாக இருக்கலாம்.

​உப்பு குறைவாக பயன்படுத்தவும்

samayam tamil Tamil News Spot

உணவில் உப்பின் அளவை குறைவாக அல்லது அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தத்துக்கு வழி வகுக்கும். இதய ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை உண்டாக்கும்.நாள் ஒன்றுக்கு சோடியம் என்பது 2,300 மி.கி க்கு குறைவாக எடுத்துகொள்வதை மறவாதீர்கள்.

​பொருள்களை கவனித்து வாங்குங்கள்

samayam tamil Tamil News Spot

தினசரி நீங்கள் பயன்படுத்தும் உணவு பொருள்கள் வாங்கும் போது என்னவிதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது என்பதை கவனித்து சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகள், இடமாற்றங்கள், சர்க்கரை மற்றும் உப்பு போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.

நல்ல சுகாதாரத்தை பராமரிக்க தொற்று நோய்களை தடுக்க ஒட்டுமொத்த சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். உணவை தயாரிப்பதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

​உடற்பயிற்சி அவசியம்

samayam tamil Tamil News Spot

உணவு போன்று உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சியும் அவசியம்.ஏரோபிக் உடற்பயிற்சிகள் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். நாள் முழுவதும் உங்களுக்கு சக்தி கொடுக்க உடல்பயிற்சி உதவும். உடல் ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் உயர்த்துவதற்கு உதவக்கூடும்.

நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதுமானது. நீண்ட காலத்துக்கு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இவை உதவும். ஆய்வுகள் பல உடல் செயல்பாடுகளை நீண்ட ஆயுளுடன் இணைத்துள்ளன. நோய் தவிர்க்க உதவுகின்றன என்கிறது.

​சரியான தூக்கம்

samayam tamil Tamil News Spot

தினமும் தூக்கம் என்பதுகுறைந்தது 8 மணி நேரம் இருக்கட்டும். தூக்கம் மனதை தளர்த்தி ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். போதுமான தூக்கம் மறுநாள் உங்கள் வேலைகளை விரைவாக செய்ய உதவுகிறது.

தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவுகிறது

வயசுக்கு வந்த பெண்களுக்கு பீரியட்ஸ் பத்தி சொல்லித்தர வேண்டிய விஷயங்கள், அம்மாக்களுக்கு!

தூக்கமின்மை உடல் பருமன், இதய நோய், தொற்று, உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் ஆரோக்கியமாக இருக்க அமைதியான தூக்கம் மிகவும் அவசியம்.

புகைப்பழக்கம் மதுப்பழக்கத்தை தவிர்ப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *