Share on Social Mediaஆண்களின் சருமம் புற ஊதாக்கதிர்கள் மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழலால் சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கிறது. இது தினசரி நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பதால் இதை எதிர்கொள்ள சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

மன அழுத்தம், ஹார்மோன்கள், அதிகப்படியான வியர்வை இவையெல்லாம் சேர்ந்து சருமத்தில் மேலும் பாதிப்பை உண்டாக்கலாம். ஆண்களின் சருமம் தடிமனாகவும் எண்ணெய்பசையாகவும் பெண்களை விட அதிக வியர்வையை சுரக்கும் என்றாலும் இவை நிரந்தரமானது அல்ல. சரியான பராமரிப்பு மூலம் இதை தற்காத்துகொள்ள முடியும்.

ஆண்கள் தங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும் ஐந்து சிறந்த குறிப்புகள் இங்கு உள்ளன. நிச்சயம் இவை உங்களுக்கு உதவும்.

​சுத்தம் செய்வது முதன்மையானது

ஆண்கள் தங்கள் சருமத்தை முகம், உடல் இரண்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்தங்கள், அழுக்கு இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். சரும அழுக்கை வெளியேற்ற காய்ச்சாத பால், நுரைக்கும் க்ளென்சரை பயன்படுத்தலாம். இதை தோலில் மென்மையாக தடவி மசாஜ் செய்து கழுவலாம்.

முடி கொட்றதை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க, ஆண்களுக்கானது!

சருமத்தில் வாரம் இரண்டு முறை இறந்த செல்களை வெளியேற்றுவது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக காட்டும். இதற்கு எலுமிச்சை மற்றும் யூகலிப்டஸ் போன்ற இயற்கை பொருள்களுடன் ஸ்க்ரப் செய்யவும். இது சருமத்துளைகளை சுத்தம் செய்து மென்மையான சருமத்தை அளிக்கும்.

​சருமத்துக்கு சீரம் பயன்படுத்துங்கள்

samayam tamil Tamil News Spot

சருமத்துக்கு சீரம் பயன்படுத்துவதன் மூலம் ஆண்கள் கறைபடியாத ஃப்ரெஷ்ஷான சருமத்தை பெற முடியும். சருமத்தை சுத்தம் செய்த பிறகு சருமத்துளைகள் திறந்திருக்கும் அப்போது அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை எடுத்துகொள்ளலாம்.

ஆன்டி ஆக்ஸிடண்ட்களுடன் கூடிய வைட்டமின் சி ஃபேஸ் சீரம் சருமத்தை ஈரப்பதமாக்கி தேவையான ஊட்டச்சத்தை வழங்கும். கொலாஜனை அதிகரிக்கவும் சரும அமைப்பை மேம்படுத்தவும் இது சரியானதும் கூட. சருமம் ஆரோக்கியமான மற்றும் அழாகாக தோற்றமளிக்கும்.

​சன்ஸ்க்ரீன் பயன்பாடு

samayam tamil Tamil News Spot

சருமத்துக்கு யுவி கதிர்களின் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிரான பாதுகாப்பு சன்ஸ்க்ரீன் ஆகும். எஸ்பிஎஃப் 30 க்கு மேல் இருப்பதை பயன்படுத்துங்கள். எப்போதும் உங்கள் முகம், கழுத்து, காதுகள் மற்றும் உதடுகளில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.

தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள், வெயில், நிறமாற்றம் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் பிறகு முகத்தை கழுவி சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

​சருமத்துக்கு நல்ல மாய்சுரைசர்

samayam tamil Tamil News Spot

சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்போதும் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். கோடை மற்றும் பருவமழையின் போது ஈரப்பதமாக்குவது அவசியமில்லை என்று சொல்வது உண்மையில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தை அவ்வபோது சுத்தம் செய்தவன் மூலம் அதிகப்படியான வியர்வையை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்.

சருமத்துக்கு இயற்கையான ஈரப்பதத்தை தக்கவைப்பது கடினமாக்குகிறது. இயற்கையான பாராபென் மற்றும் எஸ்எல்எஸ் சேர்க்கலாம். சருமப்பராமரிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும்.

கூடுதலாக சீரம். பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதால் சீரம் நன்றாக செயல்படும். சருமத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

​சரும வகைகளுக்கு ஏற்ற தயாரிப்பு பயன்படுத்துங்கள்

samayam tamil Tamil News Spot

சருமத்துக்கு ஏற்ற பொருளை தேர்ந்தெடுப்பது முக்கியம். சருமம் வறண்ட மற்றும் உணர்திறன் உடையதாக இருந்தால் அல்லது முகப்பரு மற்றும் பருக்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அனைத்து சரும வகைகளுக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. முகப்பரு சருமம் கொண்டிருப்பவர்கள் வறண்ட மற்றும் பளபளப்பான சருமத்துக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது.

ஆண்களது முகத்தில் பெரும்பாலும் எண்ணெய் வடியுமே, அதை சரி செய்ய வீட்டிலேயே என்ன செய்யணும்?

இது சருமத்துக்கு நன்மையை காட்டிலும் சேதத்தை அதிகரிக்கும். அதனால் சரும தயாரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்களை இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்களுடன் ஒருங்கிணைப்பட்ட மற்றும் இராசயனம் இல்லாத தயாரிப்புகளை தேர்வு செய்யுங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *