Share on Social Mediaஇன்றைய சூழலில் நரைமுடி வயதானவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மாற்றி இருக்கிறது. ஏனெனில் உணவு, மரபியல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் கூட நரைமுடி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

உலகளவில் பாதி பேர் 50 வயதை அடைவதற்குள் நரைமுடியை எதிர்கொள்கிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. இது மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளாலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சான்றுகள் தெரிவிக்கிறது. அதே நேரம் இந்த நரைமுடி இளவயதில் உருவாவதை தடுக்க மூலிகைகள் உள்ளது என்பதை ஆய்வு கூறுகிறது. அப்படி நரைமுடி உருவாவதை தடுக்கும் மூலிகை நமது பாரம்பரியமான பொருளே. அது என்ன என்பதையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

​நரைமுடி பிரச்சனை

நரைமுடி என்பது பிரச்சனை அல்ல. இது வயதான காலத்தில் எல்லோருக்கும் உண்டாகும் பொதுவான மாற்றம். இது இளவயதினரை பாதிக்கும் போது பிரச்சனை என்று சொல்லலாம். முதுமை பகுதியில் தவிர்க்க முடியாது என்றாலும் வாழ்க்கையில் இளவயதில் தொடங்கும் போது இது கவலையையும் மன உளைச்சலையும் அளிக்கிறது. மயிர்க்கால்கள் குறைவான நிறத்தை உருவாக்குகின்றன. இது பொதுவாக 35 வயதுக்கு பிறகு நிகழ்கிறது என்று ஹார்வர்ட் ஹெல்த் கூறுகிறது.

முடி சீக்கிரம் நரைக்க தொடங்குதா, அதுக்கு காரணம் இந்த அஞ்சு உணவுதானாம், இனிமே சாப்பிடாதீங்க!

மரபியல் செயல்முறையை சீக்கிரமாக தொடங்கலாம் என்றாலும், மயிர்க்கால்களால் நிறத்தை உருவாக்கினால் அதை மாற்ற முடியாது. ஏனெனில் மெலனோசைட்டுகளின் பற்றாக்குறை மெலனின் உற்பத்தியை பாதிக்கிறது என்று சான்றுகள் தெரிவிக்கிறது. மெலனின் முடிக்கும் நிறம் கொடுக்கும் நிறமி ஆகும்.

​நரைமுடியிலிருந்து காப்பாற்றும் மூலிகை

samayam tamil Tamil News Spot

தலைமுடி நரைக்காமல் இருக்க முடி எண்ணெய்கள், ஷாம்புகள், முடி நிறங்கள் மற்றும் பேக்குகள், இராசயன தீர்வுகள் உள்ளன என்றாலும் நரையை தாமதப்படுத்த உதவும் சில உணவுகளும் பாரம்பரியமாகவே நம்மிடம் உள்ளது.

தென்னிந்திய உணவின் பிரபலாமான மூலப்பொருள் கறிவேப்பிலை. தனித்துவமான நறுமணம் மற்றும் இனிமையான சுவையுடன் கொண்டுள்ளது. நரைமுடியிலிருந்து மீட்க இவை உதவும். இதிலுள்ள வைட்டமின் கலவை நரைமுடி விழுவதை தாமதப்படுத்துகிறது.

​கறிவேப்பிலை குறித்து ஆய்வு சொல்வது என்ன

samayam tamil Tamil News Spot

இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மாடெக் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, கறிவேப்பிலையின் மேற்பூச்சு பயன்பாடு நிறமிகளை சேதப்படுத்தாமல் முடி வெள்ளையாவதை மெதுவாக்கும். . கறிவேப்பிலையில் வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கறிவேப்பிலையில் உள்ள முர்ராயா கொயினிஜி முடியின் கருப்பு நிறத்தை தக்க வைத்துகொள்ளும். வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி ஆனது முடி நிறம் இழப்பதை எவ்வாறு தடுக்கிறது என்பதை முன்பே ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுகள் முன்கூட்டிய நரைக்கு நீண்ட காலமாக காரணமாக எடுத்து சொல்லப்படுகிறது.

​கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது

samayam tamil Tamil News Spot

தினமும் 10 கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம். உணவில் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை உணவை அவ்வபோது சேர்க்கலாம். கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை குழம்பு, கறிவேப்பிலை சட்னி என்று கறிவேப்பிலையை சேர்க்கலாம்.

வெளிப்பூச்சாக கறிவேப்பிலையை அரைத்து கூந்தலுக்கு பேக் போடலாம். தேங்காயெண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்த்து கூந்தல் தைலம் காய்ச்சலாம். கறிவேப்பிலையை வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பயன்படுத்தலாம்.

​நரைமுடியை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

samayam tamil Tamil News Spot

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் கொண்டிருப்பவர்கள் 2300 மில்லிகிராம் மற்றும் அதற்கு மேல் உப்பு உட்கொள்வது ஆரோக்கியமற்ற அளவு என்று ஆய்வுகள் தொடர்புபடுத்தியுள்ளது.

முடி உதிர்வுக்கு உதவும் சப்ளிமெண்ட்கள் ? எப்போது, எப்படி எடுக்கணும்? நிபுணர் சொல்வது என்ன?

ஆரம்பகால முடி வெண்மை மற்றும் நரைத்தல் ஆகியவை இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு இதே போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் சர்க்கரை முடி உதிர்தலுக்கு பின்விளைவுகளை உண்டாக்குகிறது மேலும் முடி நிறமியில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்குகிறது.

இதனால் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தியில் குறைபாடு உண்டாகிறது. முன்கூட்டிய நரை மற்றும் வயதான தோற்றத்துக்கு இதுவும் காரணமாகிறது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *