Share on Social Media


கருத்தரிப்பு தாமதமாகும் போது அதற்கு உதவ இந்த வீட்டு வைத்தியம் உதவும் என்றாலும் நிரூபிக்கப்பட்ட ஆதாரம் என்று எதுவும் இல்லை. ஆனாலும் பின்வரும் இந்த வகை உணவுகள் விரைவாக கருத்தரிக்க உதவலாம்.

​பேரீச்சம்பழம்

வைட்டமின்கள் பி மற்றும் கே, இரும்பு, பொட்டாசியம், ஃபோலேட், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருள்களை வழங்குகிறது. கருத்தரித்தல் மற்றும் கர்ப்பகாலத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இரும்பு மற்றும் ஃபோலேட். ஊட்டச்சத்து நிரம்பிய பேரீச்சம்பழங்கள் சக்தி வாய்ந்த உணவு. இது கருத்தரிப்பதற்கும் கர்ப்பகாலத்திலும் உங்களுக்கு உதவும்.

Garlic for babies : குழந்தைக்கு பூண்டு, எப்போது, எப்படி, எவ்வளவு கொடுக்கலாம்? என்ன நன்மைகள் கொடுக்கணும்?

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களை இரண்டு டீஸ்பூன் கொத்துமல்லி தண்டுகளுடன் சேர்த்து அரைக்கவும். இதை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். கருவுறுதலை மேம்படுத்த மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்துக்குள் இந்த கலவையை குடிக்கலாம்.

​ மாதுளை

samayam tamil Tamil News Spot

மாதுளையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அத்துடன் ஏராளமான ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃபோலேட், மற்றும் பொட்டாசியம் நிரம்பியுள்ளன. இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கருவுறுதலை அதிகரிக்க செய்வதோடு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

கருப்பை புறணியை தடிமனாக்க உதவும். மாதுளை மரத்தின் பட்டை மற்றும் விதைகளை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். சில வாரங்களுக்கு தினமும் அரை டீஸ்பூன் இந்த பொடியை எடுத்துகொள்ளலாம்.

​மக்கா ரூட்

samayam tamil Tamil News Spot

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது சத்தானது. இது உடலின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது கருவுறுதலை மேம்படுத்துகிறது.

ஒரு கப் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலுடன் அரை டீஸ்பூன் மக்கா வேர் பொடியை எடுத்துகொள்ளலாம். மக்கா வேர் பொடியை சில மாதங்கள் எடுத்துகொண்டு வர வேண்டும். கருவுற்றவுடன் அதை தவிர்க்கலாம்.

​வைட்டமின் டி

samayam tamil Tamil News Spot

உடலில் வைட்டமின் டி இல்லாததால் கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருவுறாமை மற்றும் கருச்சிதைவு உண்டாகலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. அறிவியல் ஆய்வுகளின் படி வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதல் மீது பாதகமான தாக்கத்தை உண்டு செய்கிறது.

அதிகாலை சூரிய ஒளியில் 10 நிமிடங்கள் நிற்கலாம். ஆனால் சன்ஸ்க்ரின் இருக்கட்டும் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சீஸ் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். எனினும் அதிகப்படியான வைட்டமின் டி தவிர்க்க வேண்டும். அதுவும் பாதகத்தை உண்டாக்கும்.

​இலவங்கப்பட்டை

samayam tamil Tamil News Spot

இது அற்புதமான மசாலா. கருப்பை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது மலட்டுத்தன்மையை தடுக்க செய்கிறது. இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது பெண்களின் கருவுறாமைக்கு முக்கிய காரணம்.

Nutmeg Benefits : பெண்களின் வயாக்ரா ஜாதிக்காய், எப்படி எடுப்பது? வேறு நன்மைகள் என்ன? பெண்கள் அறிவது அவசியம்!

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து சில மாதங்கள் குடிக்கலாம். உணவுகளிலும் இதை சேர்க்கலாம்.

​ஆலமரத்தின் வேர்

samayam tamil Tamil News Spot

ஆலமரத்தின் வேர்கள் கருத்தரிப்பதற்கு சிறந்த வீட்டு வைத்தியம். மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேர் பொடியை எடுத்துகொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இதை செய்யலாம்.

​பூண்டு

samayam tamil Tamil News Spot

கர்ப்பம் தரிக்க சிறந்த இயற்கை தீர்வு பூண்டு சாப்பிடுவது. இருபாலருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதற்கு உதவும். இது விந்தணு மற்றும் முட்டை தரத்தை மேம்படுத்துகிறது. 4 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடுவதன் மூலம் சிறந்த பலன் பெறலாம்.

பூண்டு மென்று சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பால் வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். நீங்கள் கருவுற நினைக்கும் மாதம் குளிர்காலமாக இருந்தால் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றலாம்.

​ஜாதிக்காய்

samayam tamil Tamil News Spot

ஜாதிக்காய் மசாலாவில் சேர்க்கப்படும் பொருள். இது பெண் கருவுறுதலை அதிகரிக்கிறது. கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள அதிகரிக்க உணவில் ஜாதிக்காயை சேர்த்துகொள்ளலாம்.

ஜாதிக்காய் பொடி மற்றும் சர்க்கரை இரண்டையும் சம அளவு எடுத்து மாதவிடாய் காலத்தில் ஒரு கப் பசும்பாலில் குடித்து வரலாம்.

​இந்துப்பு

samayam tamil Tamil News Spot

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க இந்துப்பு பயன்படுத்தலாம். இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் பெண்களின் மலட்டுத்தன்மைய எதிர்த்து போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

alcohol in pregnancy : கர்ப்பகாலத்தில் மது அருந்துவது பாதுகாப்பானதா?

ஒரு டீஸ்பூன் இந்துப்புவை எடுத்து 750 மில்லி தண்ணீரில் ஊறவைக்கலாம். இந்த தண்ணீரை 3 முதல் 6 மாதங்கள் வரை காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

​கடுகு விழுது

samayam tamil Tamil News Spot

எளிய வீட்டுவைத்தியம் மூலம் நீங்கள் கருவுறுதலை அதிகரிக்க செய்யலாம். மாதவிடாய் சுழற்சியின் நான்காவது நாட்களுக்கு பிறகு கடுகு விழுதை உணவில் சேர்க்கலாம். பெண்களின் கருவுறுதல அதிகரிப்பதில் கடுகு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும் இதை அதிகம் சேர்க்க வேண்டாம்.

​துளசி

samayam tamil Tamil News Spot

துளசி பல்வேறு மருத்துவ நோய்கள் மற்றும் சுகாதார நிலைமைகள் குணப்படுத்த உதவுகீறது. இது பெண் மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த இலைகளை தினமும் மூன்று முதல் நான்கு வரை மெல்லலாம். அதை தொடர்ந்து ஒரு டம்ளர் பால் உடன் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம். கருவுறுதலை அதிகரிக்க துளசி விதைகளையும் சாப்பிடலாம்.

​பெருஞ்சீரகம் உடன் ரோஜா இதழ்கள்

samayam tamil Tamil News Spot

கருவுறுதலுக்கான மற்றொரு வீட்டு வைத்தியம் பெருஞ்சீரகம் மற்றும் ரோஜா. கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பின்பற்ற முடியாதவரக்ள் கருவுறுதலை மேம்படுத்த பெருஞ்சீரகம் மற்றும் ரோஜா சாரம் சாப்பிடலாம்.

10 கிராம் பெருஞ்சீரகம் மற்றும் 50 கிராம் ரோஜா மசித்து கலந்து தினமும் இரவு பாலுடன் கலந்து சூடாக குடித்து வரலாம்.

​சாஸ்ட்பெர்ரி

samayam tamil Tamil News Spot

ஹார்மோன் சமநிலையின்மையுடன் போராடும் பெண்களுக்கு சாஸ்ட்பெர்ரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக உடலில் புரோலாக்டின் அளவு அதிகரிப்பது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். கருப்பட்டியின் நுகர்வு பிசிஓஎஸ் ஐ எதிர்த்து மற்றும் அண்டவிடுப்பை மேம்படுத்த உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் காய்ந்த சாஸ்பெர்ரியை எடுத்து கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் சேர்த்து குடிக்கவும். கருவுறுதலை அதிகரிக்க சில வாரங்களுக்கு இந்த தேநீரை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்.

​பெருஞ்சீரகம் மற்றும் வெண்ணெய்

samayam tamil Tamil News Spot

அதிக எடை கொண்ட பெண்களில் கருவுறுதலை மேம்படுத்த இந்த கலவை உதவும். பெருஞ்சீரகம் பொடியை எடுத்து அதில் மூன்றில் ஒரு பங்காக சுத்தமான வெண்ணெயுடன் கலந்து , இந்த கலவையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு சாப்பிட்டு வரலாம்.

IVF Success Rates: செயற்கை முறை கருத்தரிப்பு எந்த வயதினருக்கு பலன் கொடுக்கும்?

இந்த வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை திறம்பட மேம்படுத்தும். ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கர்ப்பமாக இருக்க இவற்றை முயற்சி செய்யலாம். முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மேலும் பாதுகாப்பானது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *