Share on Social Media


இந்தியர்களின் நிறம் கருப்பு தான். கருப்பு அழகுதான் என்றாலும், சிலருக்கு சில இடங்களில் மட்டும் அதிக அளவில் கருமை இருந்தால் அது சங்கடத்தைத் தான் உருவாக்கும். அதிலும், கழுத்துப் பகுதியின் பின்புறம் மட்டுமின்றி, அந்தரங்கப் பகுதியான அக்குள் பகுதி, தொடைப் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் கருமை நிறத்தை பலரும் போக்க வேண்டும் என்று நினைப்பர். அதிலும், தொடைகள் மற்றும் அந்தரங்கப் பகுதி கருமையாக இருப்பது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகமாகவே எதிர்கொள்கின்றனர்.

​அந்தரங்கப் பகுதி பராமரிப்பு

பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இந்த பிக்மென்டேஷன் குறித்த சந்தேகங்களுக்கு ஒப்பனை மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் நித்யா பதில் கூறியுள்ளார். கழுத்துப் பகுதி, அக்குள் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதி கருமை எல்லோருக்கும் இருக்கும். இந்த அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க கடைகளில் விற்கப்படும் தயாரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இதனால் சரும ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

​தன்னம்பிக்கை வையுங்கள்

samayam tamil Tamil News Spot

சிலர் மற்றவர்களைப் போல தங்களுக்கும் இருக்க வேண்டும் என்று விரும்பி எங்களை அணுகுவர். ஆனால், இயற்கையாவே உங்களுக்கு இருக்கும் சருமம் தான் நிலையானது. மாடலிங் துறையில் இருப்பவர்களைப் போல் நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கக் கூடாது. முதலில் உங்களின் உடல்மேல் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் மேல் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். அதனை விட்டு விட்டு சருமத்தை வெள்ளைப்படுத்த நினைப்பது மிகவும் தவறான செயல். பொதுவாக தென்னிந்தியர்களாகிய நமக்கு சற்று கருமையான நிற சருமத்தைத் தான் பெற்று இருப்பர். அதில் சில பகுதியில் மட்டும் லேசான கருமை இருந்தால் அது பொதுவானது தான் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

​பிக்மென்டேஷன் ஏன் ஏற்படுகிறது ?

samayam tamil Tamil News Spot

தற்போதைய காலகட்டத்தில் எல்லா இளம்பெண்கள் ஜீன்ஸ், லெக்கீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவதை விரும்புகின்றனர். இதனால் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வியர்வை அங்கேயே தங்கி விடும். அதுமட்டுமின்றி, ஹார்மோன்கள் சமநிலையின்மை கூட அந்தரங்கக் பகுதிகளில் ஏற்படும் கருமைக்கு காரணமாக அமையும். பலரும் அதனைப் போக்க பல வழிகளை தாங்களே முயற்சி செய்து பார்ப்பர். அது தவறானது இயற்கையாகவே உள்ள உங்களின் உடலை நீங்கள் நம்புங்கள். அந்தரங்கக் கருமைக்கு ஹார்மோன்கள் தான் காரணம் எனில் அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *