Share on Social Media


கொரோனா பொதுமுடக்கத்தால் தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் பல மொழி படங்களும் OTT தளங்களிலேயே வெளியானது.  என்னதான் இந்த முறை ஓரளவு வசதியானதாக இருந்தாலும் தியேட்டரில் சென்று பார்க்கும்போது இருக்கும் சந்தோஷம் இதில் கிடைக்காமல் ரசிகர்கள் பலரும் தவித்தனர் . 

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து , அரசு பல தளர்வுகளை விதித்ததில் தியேட்டர்களுக்கு அனுமதி அளித்தது . இதனை தொடர்ந்து சில படங்கள் தியேட்டரில் மீண்டும் வெளியாக தொடங்கியுள்ளது.  தீபாவளி பண்டிகையன்று அண்ணாத்தே படம் நேரடியாக தியேட்டரில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் வருகிற நவம்பர்-19 ம் மூன்று  படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . 

சபாபதி

ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சந்தானம் , தனது நகைச்சுவையில் வெள்ளித்திரையில் கால் பதிக்க தொடங்கினார். சந்தானத்தின் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்த்தது. நகைச்சுவை நடிகராகவே இருந்த இவர் 2014-ம் ஆண்டு வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .பின்னர் பல படங்களில் நடித்த அவர் ,தற்போது ஸ்ரீனிவாசா ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் “சபாபதி”. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஊர்வசி, புகழ், முனிஸ்காந்த், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஆரம்பத்தில் OTT-ல் ரிலீசாகும் என்று  தற்போது நவம்பர் 19 -ம் தேதியன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

ஜாங்கோ

இந்த படத்தை இயக்குனர் மனோ காத்திகேயன் இயக்கியுள்ளார். இதில் சதீஷ் குமார், மிர்னாலினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக்,அனிதா சம்பத்  தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர் . இப்படத்தினை சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது ஒரு த்ரில்லர் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகும் . அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர்,பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது .இந்த படம் நவம்பர் 19 -ம் தேதியன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

jago

கடைசீல பிரியாணி

புதுமுக இயக்குனரான நிஷாந்த் கலிதிண்டி இயக்கி தயாரித்த படம்  “கடைசீல பிரியாணி”. இந்த படத்தில் புது முகங்கள் வசந்த் செல்வம் ,ஹக்கீம் ஷா ,விஜய் ராம் ஆகியோர் நடித்துள்ளனர் . ஜுடா பால் ,நெய்ல் செபாஸ்டியன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது . கேரளாவிற்கு பாலி வாங்கும் நோக்கில் செல்லும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதை தான் இந்த படம் .மேலும் இவர் ஆவணப்படங்கள் ,குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . முழுக்க முழுக்க புது முகங்களை மட்டுமே வைத்து இயக்கிய படமாகும் . இந்த படம் வருகிற நவம்பர் 19 -ம் தேதியன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

ALSO READ நேரடியாக தியேட்டரில் வெளியாக போகும் “கடைசி விவாசாயி”!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *