Share on Social Media


சோனியா அகர்வால் இந்திய முன்னணி திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக தமிழ் திரைப்படங்களிலேயே நடித்து இருக்கிறார். தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம ‘காதல் கொண்டேன்’.  இந்த படத்தை இயக்குனர் செல்வராகவனை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.  இவர் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 

இந்நிலையில் திகில் நிறைந்த, ஹாலிவுட் ரேஞ்சிற்கு ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஒரு திகிலூட்டும் பேய்ப் படம் தான் ‘கிராண்மா’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக விமலா ராமன், சார்மிளா,ஹேமந்த் மேனன்,குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.   இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப் பகுதிகளில் காட்சியாக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பேய் படம் போல் அல்லாமல், ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்திற்காக சோனியா அகர்வால் செய்த காரியம் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறது. 

sonia

இப்படத்தில் வரும் சண்டை காட்சிகளில் சோனியா அகர்வால் டூப் போட வேண்டாம். நானே சண்டைக்காட்சிகளில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு, அவரே அந்த காட்சிகளில் நடித்திருக்கிறார். இதனை படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்காததால் இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்திருக்கிறது. அதோடு சோரியாவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.   மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஷிபின்,ஜெயின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

ALSO READ விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *