Share on Social Media


எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தன் (Vijay Makkal Iyakkam) கலைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் (Vijay) அம்மா ஷோபாவும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் (SA Chandrasekhar) விஜய் வீட்டுக்கு முன்னால் காரில் காத்திருந்ததாகவும், அப்போது அவர் அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னதாகவும். பிறகு நாங்கள் இருவரும் அங்கிருந்து மணக்கசப்புடன் கிளம்பி வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியாக சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது.

ALSO READ | விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதா? உண்மை என்ன..!!

இந்நிலையில் தற்போது இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது.,

வணக்கம், இன்று வார இதழ் ஒன்றில் என்னுடைய பேட்டி வெளியாகியுள்ளது. நான் கூறிய அனைத்தும் அந்த பேட்டியில் இடம்பெற்றுள்ளது. நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசுபவன். அந்த வார இதழில் என்னுடைய படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்துக்கும் நான் வெளிப்படையான பதிகளைக் கொடுத்துள்ளேன். அதே போல் என்னுடைய குடும்பத்தைப் பற்றி கேட்கும் போது தவறான கருத்து ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியே காரில் காத்திருந்ததாகவும், அவர் அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னதாகவும், மேலும் நாங்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. 

 

ALSO READ | விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: நடிகர் விஜய்யின் தந்தை அறிவிப்பு

அந்த செய்தி தவறானது, உண்மை இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கும் விஜய்க்கும் பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால் விஜய் மற்றும் அவரது தாய் இடையில் எவ்வித மனக்கசப்பும் இல்லை என்பதை இந்த வீடியோ மூலம் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *